லவ் மேட்டர்.. ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டா போட்டி.. கொலையில் முடிந்த விபரீதம்
காதல் விவகாரத்தில் இளைஞரை சக மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
Recommended Video

கோவை: ஒரு பெண்ணுக்காக 2 மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டு, கடைசியில் அது கொலைவரை வந்து முடிந்துவிட்டது.
கோவை உக்கடம் அடுத்த கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் முரளீதரன். இவர் கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள, ஒரு தனியார் காலேஜில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இவர் அதே காலேஜில் 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பாலாஜி என்ற மாணவனும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.

காதல் விவகாரம்
இந்த விஷயம் ஒருத்தருக்கொருத்தர் தெரியவர, அது தகராறாக வெடித்துள்ளது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக ரெண்டு பேருக்கும் எப்பவுமே மோதல் வெடித்து வந்திருக்கிறது.

கொலை செய்ய முடிவு
ஆனால் முரளீதரனுக்கு அந்த பெண் கிடைக்கவே கூடாது என்றும், அதற்காக அவரை கொலையே செய்துவிட வேண்டும் என்றும் பாலாஜி முடிவு செய்தார். இந்நிலையில், கெம்பட்டி காலணியில் உள்ள மைதானம் அருகில் முரளீதரன் நின்று கொண்டிருந்தார்.

தப்பி ஓட்டம்
அப்போது அங்கு வந்த பாலாஜி, திடீரென ஒரு கத்தியை எடுத்து முரளீதரன் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் முரளீதரன் ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில் அலறி துடித்தவாறே கீழே சரிந்து விழுந்தார். இதை பார்த்ததும் பாலாஜி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கொலையாளி கைது
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் முரளீதரனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த போலீசார் முரளீதரனின் உடலை மீட்டு இதுசம்பந்தமான நடவடிக்கையில் இறங்கினர். தப்பியோடிய பாலாஜியை 2 மணி நேரத்தில் கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications