அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் அஞ்சலி.. உருக்கம்!
சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த போதே நெஞ்சுவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பால் இவர் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் அவரின் வீட்டிற்கு சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏக்கள் சிலரும் சென்று இருந்தனர்.
இதன் பின் செய்தியாளர்ளை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் மறைந்த எம்எல்ஏ கனகராஜ் குறித்த தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மறைந்த கனகராஜ் அதிமுக கட்சியில் நிறைய பணிகளை செய்து இருக்கிறார். கழகத்திற்காக அவர் நிறைய உழைத்து இருக்கிறார். அரசியலில் அவர் படிப்படியாக முன்னேறினார்.
மக்களிடம் அதிகம் அன்பையும் மரியாதையும் பெற்றவர் அவர். சிறப்பான முறையில் கழகத்தில் பணியாற்றியவர். மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதில் முன்னுரிமை கொடுத்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருந்தவர்.
அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத மறைவு. அதிமுகவிற்கு இது பேரிழப்பு. அவரை பிரிந்து வாழும் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications