கோவையில் ஆச்சரியம் தந்த கர்ப்பிணி.. மோடி ஆபீசுக்கு பறந்த லெட்டர்...வாய்பிளந்த கோயம்புத்தூர்.. சூப்பர்
கோவை: பிரதமர் மோடியின் அலுவலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கோவை இளம்பெண்ணின் கடிதங்கள்.. யாரிந்த பெண்? பிரதமருக்கு எதற்காக கடிதம் எழுதினார்?
மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து, கடிதம் எழுதுவதும், மனு அனுப்புவதும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் அன்றாட செயல்களில் ஒன்றாகும்.

கோவை பெண்: சிலசமயம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாட்டிலுள்ள பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடிக்கு அவ்வப்போது கடிதம் எழுதுவது வழக்கம்.. சிலசமயம், பிரதமரும் மாணவ, மாணவியர்களுக்கு பதில் கடிதம் எழுதுவார்.
2 நாளைக்கு முன்புகூட, உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கிர்த்தி துபே, விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.. "நீங்க பாட்டுக்கு விலைவாசியை உயர்த்திட்டீங்க.. என் பென்சில், ரப்பர் இதெல்லாம்கூட விலை உயர்ந்துவிட்டது. நான் பென்சில் கேட்டால், என் அம்மா என்னை அடிக்கிறாங்க? நான் என்ன செய்யட்டும்? அப்படியே ஸ்கூலுக்கு பென்சில் கொண்டுபோனாலும், என் பென்சிலை வகுப்பில் திருடுகிறார்கள்" என்றெல்லாம் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
கர்ப்பிணி பெண்: இந்நிலையில், நம்முடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதையே, தொடர்கதையாக வைத்திருக்கிறார்.. கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் பழனிசாமி.. இவர் ஒரு அரசு ஊழியர் ஆவார்.. இவரின் மனைவி பெயர் கிருத்திகா. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி, மகளிர் தினத்தன்று பிரதமர் மோடிக்கு முதல்முறையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சமையல் கேஸ் விலை அதிகமாகிவிட்டது.. சமாளிக்கவே முடியவில்லை.. அதனால், அதனை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.. பிறகு, 2-வதாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் கோரி மனு எழுதியிருந்தார்.
நிர்பயா அமைப்பு: இதற்கு பிறகு, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தல், நிர்பயா அமைப்பு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு அதிகமாகதருவது, பி.எஸ்.என்.எல் 5 ஜி சேவை நிறுவுவது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்துவது விவகாரத்திலிருந்து இஸ்ரேல்-காசா போர் வரை கிருத்திகா தன்னுடைய கடிதங்களில் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
அந்தவகையில், இதுவரை மொத்தம் 264 கோரிக்கை மனுக்களை எழுதி பிரதமருக்கு அனுப்பியுள்ளார்... நேற்று தன்னுடைய 264-வது கடிதத்தையும் எழுதி அனுப்பியிருக்கிறார். இந்த கடிதத்தில், "இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையில் கடமைகள் தெரியப்படுத்தி, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன்னெடுத்தள்ளார்.
சிக்கல்கள்: ஒவ்வொரு முறையும், நாட்டை உலுக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளை மையப்படுத்தி, அது தொடர்பான சிக்கல்களை களையும்படி, கிருத்திகா அனுப்பி வரும் கடிதத்திற்கு, பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து அக்னாலேஜ்மண்டு தருகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, தினமும் காலை 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து போனில் அழைத்து, அவரது மனு குறித்து விவாதிக்கிறார்களாம்..
இதுகுறித்து கிருத்திகா சொல்லும்போது, "என் கணவர் உள்பட குடும்பத்தினர் எல்லாருமே எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்.. இதனால், மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன். அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் அதே கோரிக்கையை நான் தெரிவித்தாலும், அந்த கோரிக்கையானது நிறைவேறும்போது, அதில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதாக நினைத்து மன நிறைவடைகிறேன்.
பூரித்த கிருத்திகா: பெரியார், அம்பேத்கர், மார்கஸ் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை படித்திருக்கிறேன்.. இதனால், பொதுமக்களின் நலன் சார்ந்து தினமும், இம்மாதிரியான கடித போக்குவரத்து பணியை தொடர இருக்கிறேன்" என்று பூரித்து சொல்கிறார் கிருத்திகா.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications