உடுமலையில் ஒரே அதிசயம்.. அம்மனுக்கு "வியர்த்ததா".. சிலையிலிருந்து முத்து முத்தா வடிந்த நீர்த்துளிகள்

அம்மன் சிலையில் இருந்து நீர்த்துளிகள் வியர்வையாய் வடிந்த வீடியோ ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

கோவை: அம்மன் சிலையில் இருந்து நீர்த்துளிகள் வியர்வையாய் வடிந்ததை கண்டு பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.. இதுகுறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.

கோயில்களில் உள்ள சாமி சிலைகள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிடுவது வழக்கம்.. பிள்ளையார் பால் குடிப்பது, வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவது என தகவல்கள் வெளியாகும்.

இவையெல்லாம் வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் இணையத்தில் வெளியாகி, பக்தர்களுக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் தந்து வருகின்றன..

 பூசாரி

பூசாரி

இப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் திம்மநாயக்கன்பாளையம் கிராமம் அருகே ஒரு சம்பவம் நடந்தது.. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் பூசாரி கோவிலை திறந்து பூஜைக்கு தயாரானார்... அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பிறகு அம்மன் சிலையை பூசாரி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அம்மனின் வலது கண் திறந்து இருப்பதாக சிறுமி சொன்னதுமே, அருகில் இருந்து பூசாரி திரும்பி பார்த்தார்..

 ஆச்சரியம்

ஆச்சரியம்

அப்போது அம்மன் கண் திறந்திருந்ததை பூசாரியும் கண்டார். பின்னர், உடனடியாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. இதுபற்றி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் பரவியது. கோவிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்கள்.. 3 நாட்களாகவே அம்மன் கண் திறந்தே இருந்தது என்றும் அதில் இருந்து நீர் வடிகிறது என்றும் வியந்து கூறியிருந்தனர். இப்போதும் அதுபோலவே, உடுமலையில் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளதாம்..

 புற்றுப்பூஜை

புற்றுப்பூஜை

அங்குள்ள திருப்பதி கோவிலில் வருடந்தோறும் யுகாதிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் யுகாதிப் பண்டிகையையொட்டி வரும் 22-ந்தேதி காலை 10 மணிக்கு ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது... இதற்காகவே சிறப்பான ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. மேலும், கடந்த 8-ந்தேதி முதல் தினசரி புற்றுப்பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது... அதன்படி புற்று வடிவிலுள்ள ரேணுகாதேவிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது..

 முத்து முத்து வியர்வை

முத்து முத்து வியர்வை

அப்படி நடைபெற்ற பூஜையின்போது ரேணுகாதேவியின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை வடிந்துள்ளது.. இதை பார்த்ததும் பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.. இந்த தகவல் தீயாய் பரவவும், அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள், ஆவலுடன் திரண்டு வந்து, வியர்வை வழியும் முகத்துடன் தரிசனம் தந்த ரேணுகாதேவி அம்மனை தரிசித்து சென்றனர்.. மக்களின் கஷ்டங்களை போக்கும் அம்மன் கோடை வெப்பத்தின் கடுமையை தனக்குள் வாங்கி காட்சி தருவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+