Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனத்துறையிலும் தனியார் மயமா?.. கண்ணீரில் வன மகன்கள்.. பொங்கிய முத்தரசன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு வனத் துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியை தனியார் வசம் ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனியார்வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு வனத் துறை வேட்டை தடுப்பு காவலர்கள் முறையிட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.

பொதுவாக வனத் துறையில் பணியாற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பழங்குடி மக்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுக்கு காடு, விலங்குகளின் நடமாட்டம் போன்றவை குறித்த அனைத்து விஷயங்களும் அத்துப்பிடி. இந்நிலையில், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியை தனியார்வசம் ஒப்படைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

forest department mutharasan

இதையடுத்து, முதுமலை, மேகலை, களக்காடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியத்திடம் வேட்டை தடுப்பு காவலர் பண்டிகை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என கோரிக்கை விடுத்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டு வந்தனர்.

அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இணைந்து மாவட்ட வன பாதுகாப்பு அலுவலரை சந்தித்து வேட்டை தடுப்பு காவலர்களின் கோரிக்கைகள் அவர்கள் காடுகளில் சமாளிக்கும் சவால்கள் குறித்து கூறினார். மேலும் தனியார் வசம் ஒப்படைத்தால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முத்தரசன் கூறுகையில், வனத்துறையில் பணியாற்றக் கூடிய வேட்டை தடுப்பு காவலர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். சட்டவிரோத வனவிலங்கு வேட்டையை தடுப்பது, வனப் பகுதிக்குள் வனவிலங்குகளை திருப்பி அனுப்புவது, வனவிலங்குகளை பாதுகாப்பது, காடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் தான் மேற்கொண்டு வருகிறார்கள்.

வேட்டை தடுப்பு காவலர்கள் பலரும் பட்டதாரிகள். குறிப்பாக பழங்குடியின மலைவாழ் பகுதியை சார்ந்தவர்கள் தான் வேட்டை தடுப்பு காவலர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு இந்த பணியை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இவர்களுக்கும் வனத்துறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும்.

எனவே, உடனடியாக தமிழக அரசு இந்த போக்கை கைவிட வேண்டும். தனியார் இடத்தில் இந்த பணியை விடுவது ஏற்புடையது அல்ல. இதில் அதிகாரிகள் தெளிவாக உள்ளார்கள். ஆனால் மேலிட முடிவு என்று அதிகாரிகள் கூறிவதால் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு அனுப்புகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளை நவம்பர் 27, 28 ஆம் தேதிகளில் சந்திக்க திட்டமிட்டுள்ளது.

வேட்டை கடுப்பு காவலர்கள் 10 ஆண்டுகள் கழித்து நிரந்தர பணி ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலையில் அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக அரசு முடிவு எடுத்திருப்பது இதிலிருந்து தெரியவந்துள்ளது. இதனால் தூய்மை பணியாளர்களின் பணி ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வது போன்ற அபாயம் இவர்களுக்கு ஏற்படும்.

எனவே, அரசு கருணையுடன் இவர்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுப்பதை பொருத்தே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+