மீண்டு எழும் திருப்பூர், கோவை.. கொங்கு மண்டலத்திற்கு தமிழக அரசு.. லட்டு மாதிரி வெளியிட்ட அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த திருப்பூர், கோவை போன்ற கொங்கு மண்டல மாவட்டங்களின் ஜவுளி துறையை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் ஜவுளி துறையில் உச்சத்தில் இருந்தன . ஆனால் கொரோனா காலத்திற்கு பின் அதில் பெரிய சரிவு ஏற்பட்டது. அதற்கு முன்பே பணமதிப்பிழப்பு முறை காரணமாக பெரிய அளவில் சரிவு ஏற்பட்டது. முக்கியமாக பணமதிப்பிழப்பு முறை காரணமாக பலரும் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தனர். இதனால் பிஸ்னஸ் செய்யும் பணியில் இருந்தே அவர்கள் வெளியேறினர்.

tirupur coimbatore

இந்த தொடர் சரிவுகள் காரணமாக கொங்கு மண்டலத்தின் பொருளாதாரம் சரிந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு வங்கதேசம் வளர்ந்தது. ஜவுளி துறையில் வங்கதேசம் யோசிக்க முடியாத அளவிற்கு வேகமாக வளர்ச்சி கண்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தது , அங்கே நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் ஜவுளி துறை வளர தொடங்கி உள்ளது.

அதில் ஒரு கட்டமாக தமிழ்நாடு அரசு ஜவுளி ஆலைகளை நவீனமயமாக்க வட்டி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. 6% வட்டியில் எளிதாக கடன் வழங்கும் திட்டத்தை ஐந்து ஆண்டுகள் அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை, முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விரும்பும் ஜவுளி ஆலைகளுக்கு 6% வட்டி மானியத் திட்டத்தை செயல்படுத்த, நடப்பு நிதியாண்டில் (2024-2025) ₹10 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

டிசம்பர் 9, 2024 தேதியிட்ட உத்தரவின்படி, இத்திட்டத்தை 2024 முதல் 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதற்காக துறை ரீதியாக ₹500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ரிங் பிரேம் ஸ்பின்னர்களுக்கு 60% நிதியும், மற்ற பணிகளுக்கு 25% நிதியுதவியும் அளிக்கப்படும் என்று திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.. எண்ட் ஸ்பின்னிங், மற்றும் ஏர் ஜெட் அல்லது எலக்ட்ரோ ஸ்பின்னிங் யூனிட்டுகளுக்கு 15% வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

6% வட்டியில் 5 ஆண்டு அடிப்படியில் கடன் வழங்கப்படும். தொழில் தொடங்குதல், அதற்கு இயந்திரங்கள் வாங்குதல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.

புதிய இயந்திரங்கள் வாங்குவது மட்டுமன்றி.. 15 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து ஸ்பிண்டில்கள் அல்லது ரோட்டர்களை நவீனப்படுத்தவும் இந்த நிதியை பயன்படுத்தலாம். அதற்கும் லோன் எடுக்கலாம். நூற்பாலை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை வாங்குவதற்கும் இந்த லோனை எடுக்க முடியும்.

நாட்டில் மொத்தமுள்ள 45 மில்லியன் ஸ்பிண்டில்களில் 19 மில்லியன் ஸ்பிண்டில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவை ஏழு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். தமிழக அரசு வழங்கும் இந்த நிதி உதவி பெரிய அளவில் அரசுக்கு பலன் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டம் காரணமாக கொங்கு மண்டலத்தில் உற்பத்தி 20% வரை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொங்கு மண்டலத்தில் தொழில்துறை புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+