தூத்துக்குடி, திருப்பூரை தொடர்ந்து கொரோனா சிகிச்சை பெற்ற கோவை பெண் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!
கோவை: தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து கோவையில் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற திருச்சி இளைஞர் உயிரிழந்தார். பெங்களூரில் பணிபுரிந்த நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் திருச்சியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருப்பூரில் அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சத்தால் பொது இடங்களில் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனை வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 198 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் அதிகபட்சமாக 63 பேருக்கும் செங்கல்பட்டில் 25 பேருக்கும் கோவையில் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று 3558 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 105 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1086. தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,050.
தமிழ்நாட்டில் மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 8 மாவட்டங்களில் கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த போதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை என ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications