கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவோடு இரவாக.. மாவட்டங்களுக்கு பறந்த வேக்சின்கள்.. சென்னையை அடுத்து கோவைக்குத்தான் அதிக டோஸ்!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: நேற்று தமிழகம் வந்த 495570 டோஸ் வேக்சின்கள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. சென்னைக்கு அடுத்து கோவைக்குத்தான் இதில் அதிக வேக்சின் ஒதுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Pfizer மற்றும் Moderna போன்ற வெளிநாட்டு Vaccine India-வில் எப்போது கிடைக்கும் ?

    நேற்று புனேவில் இருந்து 4,20,570 கோவிட்ஷீல்ட் டோஸ்கள் மற்றும் 75000 கோவாக்சின் டோஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. கொரோனா வேக்சினை கொடுக்காமல் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று மக்கள் கொந்தளித்த நிலையில் மத்திய அரசு மூலம் நேற்று மாலையில் கொரோனா வேக்சின் சென்னை வந்தது.

    தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

    கடந்த 29ஆம் தேதி 58,410 கோவாக்சின் தடுப்பூசி தமிழகத்திற்கு கடைசியாக வந்தது. நேற்று வரை 9050183 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது வரை உள்ள கையிருப்பில் 6.50 லட்சம் டோஸ் வேக்சின் உள்ளது.

     எவ்வளவு போடப்பட்டுள்ளது

    எவ்வளவு போடப்பட்டுள்ளது

    இதன் மூலம் இன்னும் 2 -3 நாட்களுக்கு வேக்சின் போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வேக்சின் தட்டுப்பாடு காரணமாக நேற்று 98,183 பேருக்கு மட்டுமே தமிழகத்தில் வேக்சின் போட முடிந்தது. இதுவரை மொத்தமாக தமிழகத்திற்கு 1.01 கோடி வேக்சின் வந்துள்ளது. கையிருப்பில் உள்ள வேக்சின்கள் விரைவில் போட்டு முடிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

     வேக்சின்

    வேக்சின்

    நேற்று புதிதாக வேக்சின் தமிழகம் வந்த நிலையில், உடனுக்குடன் அது நேற்று இரவே மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. வாகனங்கள், விமானங்கள் மூலம் மாவட்டங்களுக்கு வேக்சின் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னைக்கு நேற்று 54570 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது. 10000 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது. சென்னைக்கு அடுத்து கோவைக்குதான் அதிக டோஸ் ஒதுக்கப்பட்டது.

    கோவை

    கோவை

    மக்கள் தொகை, நுகர்வு அடிப்படையில் மாவட்டங்களுக்கு டோஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு 40000 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது, 8000 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது. செங்கல்பட்டுக்கு 16000 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது, 3000 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது. மதுரைக்கு 15000 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது, 2500 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது.

    திருச்சி

    திருச்சி

    திருச்சிக்கு 15000 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது, 3000 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது. இதில் அறந்தாங்கிக்கு குறைவாக 3000 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது, 500 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் வேக்சின் போடுவதில் கோவை புறக்கணிக்கப்படுகிறது என்று பொய்யான தகவல் பரப்பப்பட்ட நிலையில், தொடர்ந்து கோவைக்கு வேக்சின் ஒதுக்குவதில் சென்னைக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    English summary
    Tamilnadu government supplies 4.95 lakhs doses vaccine to districts yesterday. Coimbatore gets more vaccine doses after Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X