தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ2,000 வழங்கும் பணி தொடங்கியது!
கோவை: தமிழகத்தில் 2 வார காலம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ2,000 வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. கோவையில் இன்று அமைச்சர் அர. சக்கரபாணி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா மரணங்களும் 300ஐ நெருங்கி உள்ளன.

இதனால் தமிழகத்தில் 2 வார முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் லாக்டவுனில் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே லாக்டவுன் அமலில் உள்ளதால் கொரோனா நிவாரண நிதியாக ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ4,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல் தவணையாக ரூ2,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை சில நாட்களுக்கு முன்னர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கோவை மணீஸ் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அர. சக்கரபாணி, ரூ2,000 வழங்கும் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். ரேசன் கடைகளில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க ஏற்கனவே இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications