Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருதமலையில் தைப்பூசத் திருவிழா: இந்த வழியா போயிடாதீங்க.. போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 31 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 6 மணி வரை பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வரும் 31.01.2026 முதல் 02.02.2026 வரை நடைபெறும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டும், மேலும் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதாலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பாத யாத்திரை வரும் பக்தர்கள் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்து வரவும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மருதமலை மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

Maruthamalai thaipoosam traffic change

பக்தர்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தேவஸ்தான பேருந்து மூலமாகவும் மற்றும் மலைக்கோயில் படிக்கட்டு வழியாகவும் கோவிலுக்கு சென்று வரலாம்.

மருதமலை செல்லும் பேருந்துகள் - ஆம்னி பேருந்துகள்

கோவை மாநகரத்தில் இருந்து மருதமலை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பாரதியார் பல்கலைக்கழகம் Gate No.II வழியாக உள்ளே சென்று தொலைமுறை கல்விக்கூட வளாகம் முன்பு பயணிகளை இறக்கிவிட்டு பின்பு மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு கோவை மாநகருக்குள் வர வேண்டும்.

Parking: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்

மருதமலைக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் அனைத்து பக்தர்களும் தங்களது வாகனங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கட்டாயம் பார்க்கிங் செய்யவேண்டும்

Parking No-1 - பாரதியார் பல்கலைகழகம் குடியிருப்பு வளாகப் பகுதி பார்க்கிங் (CAR)

Parking No -2 -பாரதியார் பல்கலைகழகம் தொலைமுறை கல்விக்கூடம் கேட்

அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள்

Parking No-3- அரசு சட்டக்கல்லூரி மைதானம் (CAR)

Parking No-4-பொதிகை Pillar பார்க்கிங் (CAR)

Parking No-5 - பொதிகை ஆர்ச் பார்க்கிங் (Pass Holder, Kattalaithararkal, Ubayathararkal)

Parking No - 6 CTC Bus stand Back side (Two Wheeler only)

Parking No-7-தைலக்காடு பார்க்கிங் (Two Wheeler only)

Parking No - 8 - தைலக்காடு பார்க்கிங் (Bridge Side - Car)

Parking No-9-இந்திரா நகர் பார்க்கிங் (Car)

Parking No- 10 குமரன் ஹால பார்க்கிங் (Car)

Parking No- 11 வள்ளியம்மை கோவில் பார்க்கிங் (Car)

எனவே மருதமலை கோவிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்திற்கும், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் மேற்கண்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையின் அறிவிப்பில் கூறியுள்ளதாவது, மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 31.01.2026 காலை 08.00 மணி முதல் 02.02.2026ம் தேதி காலை 06.00 மணி வரை பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

ஒரு வழிப்பாதை

கோவை மாநகரில பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாலிரோடு ரவுண்டானா, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, பி.என்.புதூர், முல்லை நகர் செக்போஸ்ட் வழியாக மருதமலைக்கு வரும் அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளும் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு சந்திப்பில் இடது புறம் திரும்பி மகாராணி அவென்யூ, சின்மயா வித்யாலயா பள்ளி, அருண் நகர் வழியாக அஜ்ஜனூர் சந்திப்பில் வலது புறம் திரும்பி பொம்மன்னன்பாளையம் ரோடு வழியாக கல்வீரம்பாளையம் அடைந்து மருதமலை வரவேண்டும்.

I. அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருநதுகள் பாரதியார் பல்கலைக்கழக Gate No. II வழியாக தொலைமுறை கல்விக்கூட வளாகம் வந்து ஏற்றவும், இறக்கிவிடவும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகள் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

II. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து இலகுரக வாகனங்களும் மருதமலை அடிவாரம் தைலக்காடு வரை மட்டுமே சென்று குறிப்பிடப்பட்டுள்ள பார்க்கிங்கில் மட்டும் நிறுத்த வேண்டும்.

III. தடாகம் ரோடு இடையார்பாளையம் சந்திப்பில் இருந்து வடவள்ளி ரவுண்டானா வழியாக மருதமலை செல்லும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி தொண்டாமுத்தூர்ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி மேலே குறிப்பிட்டுள்ள கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலை செல்ல வேண்டும்.

IV.தடாகம் ரோடு ஆசிரியர் காலனி, கணுவாய், காளப்பநாயக்கன்பாளையம் வழியாக நவாவூர் பிரிவு வரும் அனைத்து வாகனங்களும் இடையார்பாளையம் சாலை வழியாக வடவள்ளி ரவுண்டானா வந்தடைந்து தொண்டாமுத்தூர்ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி மேலே குறிப்பிட்டுள்ள கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலை செல்ல வேண்டும்.

V.சிறுவாணி ரோடு தொண்டாமுத்தூரில் இருந்து கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனஙகளும் அஞ்சனூர் சந்திப்பு பொம்மன்னம்பாளையம் சந்திப்பில் வலது புறம் திரும்பி வேடப்பட்டி, பூசாரிபாளையம்ரோடு வழியாக தடாகம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

VI.மருதமலை அடிவாரத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கல்வீரம்பாளையம் சந்திப்பு நவாவூர்பிரிவு, வடவள்ளி ரவுண்டானா வந்தடைந்து வழக்கமான வழித்தடத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

VII. தடாகம் ரோடு லாலிரோடு சந்திப்பு வழியாகவும், வடவள்ளி இடையர்பாளையம்ரோடு, ரவுண்டானா வழியாகவும், தொண்டாமுத்தூர்ரோடு வழியாகவும் இலகுரக மற்றும் கனரக சரக்கு (Light and heavy goods vehicles) 31 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு 10.00 மணி வரை மருதமலை வடவள்ளி சாலையில் செல்வதற்கு தடை செய்யப்படுகிறது.

எனவே மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்திற்கும், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாமல் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+