கோவையில் மோசமாக பெர்ஃபார்ம் செய்த திமுக? அதிமுக கோட்டைக்குள் அடித்து ஆடிய அண்ணாமலை?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை லோக்சபா தொகுதியில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான வித்தியாசம் என்பது மிகவும் மெல்லிய கோடாகவே உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்குமான தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024

தமிழகத்தில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட்டது. திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி), பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க), தமமுக ஜான்பாண்டியன் (தென்காசி), இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தேவநேசன் (சிவகங்கை) ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கரூரை விட்டுவிட்டு கோவையில் அண்ணாமலை போட்டியிட்டது விமர்சிக்கப்பட்டது. கரூரில் திமுக கூட்டணிக்கு அஞ்சியே அவர் கோவை சென்றுவிட்டார் என பேசப்பட்டது. கோவையில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் சார்பில் கண்மணி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் தந்தி டிவியின் கணிப்பில் கோவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 31.5 சதவீதம், அ.தி.மு.க 31 சதவீதம், பா.ஜ.க 30.5 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது முதலிடத்தில் உள்ள திமுகவுக்கும் 3ஆவது இடத்தில் உள்ள பாஜகவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. திமுகவுக்கும் அதிமுகவுக்கு 0.5 சதவீதமும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கு 0.5 சதவீதமும் திமுகவுக்கும் பாஜகவுக்கும் 1 சதவீதமும் வாக்கு சதவீதத்தில் வித்தியாசம் உள்ளது. அதாவது கோவையில் அதிமுகவின் வாக்குகளை பாஜகவும் அறுவடை செய்வதாகவே இந்த கணிப்புகள் சொல்லப்படுகிறது.

3 கட்சிகளுக்குமான வித்தியாசம் 0.5 என்றே உள்ளது எப்படி சாத்தியம் என்பதை பார்ப்போம். இந்த தொகுதியை பொருத்தமட்டில் சூலூர், கவுண்டம்பாளையம் போன்ற ஊரக பகுதிகளில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது. சூலூரில் மொத்தம் 75 சதவீதம் வாக்குகளில் மொத்தமாக அதிமுவுக்கு விழுந்திருக்கிறதா இல்லை அதிமுக ஓட்டுக்களை பாஜக அறுவடை செய்திருக்கிறதா? கோவை லோக்சபா தொகுதிக்குள்பட்ட சூலூரில் 75 சதவீதம் வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளது.

எனவே கோவையில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரோ சூலூர் மக்களை கவர்ந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. கோவையின் தெற்கு பகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. அதாவது சிங்காநல்லூர், வடக்கு கோவையின் சூலூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. கோவையில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் திமுகவை விட அதிமுக அதிகளவுக்கு பெர்ஃபார்ம் செய்துள்ளது.

அதிமுகவும் பாஜகவும் வாக்குகளை பிரித்து கொண்டதால் அது திமுகவுக்கு சாதகத்தை ஏற்படுத்திவிட்டது. எனவே கோவையை பொருத்தமட்டில் கொங்கு பெல்ட் என்பது பாஜகவுக்கு சாதகமானது என்றாலும் அங்கு பாஜகவின் வளர்ச்சி என்பது சற்று அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கோவை பெல்ட் அதிமுகவுக்கு சாதகமான தொகுதி, அது போல் எஸ்.பி.வேலுமணியின் கோட்டை! அதற்குள்ளேயே அண்ணாமலை புகுந்துவிட்டாரே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+