கோவையில் இன்று ஆசிய ஜவுளி மாநாடு தொடங்குகிறது! மாநாட்டில் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்
கோயம்புத்தூர்: கோவையில் இன்று ஆசிய ஜவுளி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்க மத்திய மாநில அமைச்சர்கள் கோவைக்கு வருகை தர உள்ளனர்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு சாா்பில் 'ஆசியா - 2025ம் ஆண்டுக்குப் பிறகு ஜவுளி உற்பத்தி மற்றும் நுகா்வோருக்கான உலகளாவிய மையம்' என்ற தலைப்பில் 11வது ஆசிய ஜவுளி மாநாடு கோவையில் இன்று தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாடு கோவையில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள், தொழில்முனைவோா்கள், விநியோகஸ்தா்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், ஜவுளித் தொழில் தொடா்பான உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் இன்று காலை 10.15 மணிக்கு இந்த மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளி, வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கோவைக்கு வருகிறார். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் ரேஸ்கோா்ஸ் சைமா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சைமாவின் நிறுவனத் தலைவா் ஆா்.கே.சண்முகம் செட்டியாரின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில், ஜவுளி, ரயில்வே துறை இணையமைச்சா் தா்ஷனா வி.ஜா்தோஷ் கலந்து கொள்கிறாா்.
இதைத் தொடா்ந்து மாலை 6 மணியளவில் ஆசிய ஜவுளி மாநாட்டில் அமைச்சா் பியூஷ் கோயல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள் சு.முத்துசாமி, ஆா்.சக்கரபாணி, ஆா்.காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவா் டி.ராஜ்குமாா், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் ரவி சாம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி












Click it and Unblock the Notifications