கோவையையும், என்னையும் பிரிக்க முடியாது.. தன் ஆர்மோனியத்தின் சீக்ரெட்டை பகிர்ந்த இளையராஜா
கோவை: கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு செய்த ஆர்மோனிய பெட்டியைத் தான் தற்போது வரை பயன்படுத்தி வருகிறேன். கோவையை என்னில் இருந்து பிரிக்கவே முடியாது என்று இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு இளையராஜா நேற்று வந்திருந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜாவுக்கு, ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது: நான் பேச்சாளர் கிடையாது, நான் பாட்டாளி. பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுபவன் வேலை செய்பவன். என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு. என் பாடு பாட்டாகின்றது. எங்கெங்கோ சிற்றோடைகள் நதியாக ஓடுவதைப் போல, ஒரு நோக்கத்திற்காக இங்கே அனைவரும் வந்து இருக்கின்றீர்கள்.
கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு நான் ஆர்மோனியம் வசிக்காத இடங்களே கிடையாது. நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்ததுதான். என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார். இப்போது வரை அது என்னிடம் இருக்கின்றது. அதைப் பயனபடுத்தி வருகின்றேன் என தெரிவித்தார்.
கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என கூட சொல்ல முடியாது. கோவையை நான் பிரிவது கிடையாது என்று சொல்லலாம் என்று கூறி நெகிழ்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து விளம்பரதாரர்களும் இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications