அண்ணாமலை போட்டோவுடன் வானில் பறக்கும் ராட்சத பலூன்? கோவை கலெக்டர் தந்த விளக்கம்
கோவை: கோவை லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிட உள்ளார். இந்நிலையில் தான் கோவை டவுன் பஸ் நிலையத்தின் முன்பு அண்ணாமலை போட்டோவுடன் ராட்சத பலூன்கள் வானில் பறக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவும் நிலையில் அதுபற்றி மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக தனியே கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

மீதமுள்ள 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி, பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற மக்கள் கட்சி, தேவநாதனின் கட்சி உள்ளிட்டோருக்கு பாஜக தொகுதியை பகிர்ந்து வழங்கி உள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முதற்கட்டமாகவும், இன்று 2வது கட்டமாகவும் வெளியானது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கினால் களமிறங்குவேன் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் அவர் போட்டியிட உள்ளார்.
நோ சொன்ன அண்ணாமலை! ஆர்டர் போட்ட அமித்ஷா! கோவை களத்தில் 2 ஐஐஎம் முன்னாள் மாணவர்கள்!
அண்ணாமலை இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. விரைவில் அவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் தற்போது வலைதளங்களில் வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது கோவை டவுன் பஸ் நிலையத்தின் முன்பு 3 ராட்சத ஹீலியம் பலூன்கள் பறப்பதும், அதில் அண்ணாமலை, பாஜகவின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் கோவையில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் அண்ணாமலை ஆதரவான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பார்த்த எதிர்க்கட்சியினர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது இப்படி செய்யலாமா? இதற்கு அனுமதி பெறப்பட்டதா? என சந்தேகம் கிளப்பினர். மேலும் சிலர் இந்த ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டு இருப்பதற்கு ஆன செலவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பெயரில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பழைய பெரிய கை.. மாஸ்டர்மைண்ட்.. கோவையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமாரை இறக்கிய ஸ்டாலின்.. யாரிது?
இதுதொடர்பாக பலரும் கோவை லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்தி குமாரை ‛டேக்’ செய்திருந்தனர். இந்நிலையில் தான் இந்த விஷயம் குறித்து கோவை மாவட்ட கலெக்டரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛பகிரப்பட்ட போட்டோவை பார்த்தோம். இந்த போட்டோ என்பது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டதாகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் பலூன் எதுவும் பறக்கவிடப்படவில்லை’’ என தெரிவித்துள்ளார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications