நோ சொன்ன அண்ணாமலை! ஆர்டர் போட்ட அமித்ஷா! கோவை களத்தில் 2 ஐஐஎம் முன்னாள் மாணவர்கள்!
தமிழ்நாட்டிற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பலரும் எதிர்பார்த்து வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி அந்தக் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தரும். குறிப்பாகக் கோவை மாவட்ட பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் முக்கிய முகமாகப் பார்க்கப்பட்டு வரும் அண்ணாமலை, அந்தத் தொகுதியில் களம் இறங்குகிறார் என்பது முக்கியமான காரணம். பாஜகவில் உள்ள குறைந்த அளவிலான நட்சத்திர வேட்பாளர்களில் அண்ணாமலையும் ஒருவர்.
அதுவும் கொங்கு மண்டலத்தின் மண்ணின் மைந்தரான அண்ணாமலை அதே பகுதியில் போட்டியிடுவதால் கூடுதலான வாக்காளர்களைக் கவர முடியும். அதுவே பாஜகவின் திட்டமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழக பாஜகவுக்கு இது முதல் வெற்றி.
பாஜக தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தாலும், அண்ணாமலை அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டுள்ளாரா என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை. ஏனென்றால் கடந்த ஒரு மாதம் முன்னதாகக் கூட அவர் இந்த மக்களைவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். அது அவரே அறிவித்த முடிவாகவே இருந்திருக்கும் என்பது இப்போது தெளிவாகி உள்ளது.

காரணம், பொதுவாக இதைப் போன்ற கேள்விகளைப் பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் போது, 'கட்சித் தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன்' என்றுதான் சொல்வார்கள். போட்டியிடப் போவதில்லை என்று அவர்கள் உறுதியாக நம்பினாலும் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். கட்சியின் தலைமைக்கு அதைத் தெரியப்படுத்தவே செய்வார்கள்.
ஆனால், அண்ணாமலை அரசியலுக்குப் புதியவர். எனவே அவர் பட்டென்று நான் போட்டியிட மாட்டேன் என்று சொன்னதுடன் நிறுத்திக் கொள்ளாமல், 'தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டிய வேலை உள்ளது. அதனால், ஒரு தொகுதிக்குள் நான் சுருங்கி விட முடியாது' எனச் சொல்லி இருந்தார்.

பாஜகவில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தால்தான் கட்சி வெற்றிவாய்ப்பை எட்டும் என்ற நிலையை அக்கட்சி இன்னும் அடையவில்லை. அந்தளவுக்காக வளர்ச்சியையும் அண்ணாமலை பெறவில்லை.
அப்படி இருந்தும் அவர், அதிரடியாகத் தனது பிரச்சாரத்தின் மூலம் தான் கட்சியை வெற்றி பெறவைக்க முடியும் என்ற தொனியில் பேசி இருந்தது கொஞ்சம் அதிகமான நம்பிக்கை என்றே பலராலும் கருதப்பட்டது.
இதனிடையே தான் மோடி, கொங்கு மண்டலத்தை மையமாக வைத்துக் காய்நகர்த்த ஆரம்பித்தார். அதற்கு இந்தப் பகுதி முழுக்க பாஜகவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என முன்பே உளவுத்துறை மூலம் அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் சென்றதுதான்.

ஆகவே அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக தலைமை முடிவு செய்தது. அப்படி என்றால் கொங்கு வட்டாரத்தில் அதிகம் ஃபேஸ் வேல்யூ உள்ள வேட்பாளர் தேவை. அதை மனதில் வைத்து வானதி சீனிவாசனைக் களம் இறக்க மாநிலத் தலைமை முடிவு எடுத்தபோதே அதற்கு வானதி முட்டுக்கட்டை போட்டுவிட்டார். தனக்குச் சட்டமன்றமே போதும் என ஒதுங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
அடுத்ததாக இருந்தவர் அண்ணாமலை. அவரைக் களம் இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை. கோவையில் திமுக தரப்பு பலமாக உள்ளது. முன்பு மக்கள் நீதி மய்யத்திலிருந்த டாக்டர் மகேந்திரனும் திமுக பக்கம் உள்ளார். கமலை அதிக வாக்குகள் எடுக்க வைத்தவர் இவர்.
மகேந்திரனுடன் இப்போது கமல் கட்சியின் ஆதரவும் திமுகவுக்கு உள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் கவுண்ட பெல்ட் அடையாளமாக அண்ணாமலை களம் இறக்கப்பட்டுள்ளார்.
இதில், அதிமுகவும் சளைத்ததல்ல. அதிமுக தரப்பில் கோவையில் களம் இறங்க உள்ளார் சிங்கை ராமச்சந்திரன். இவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்
அண்ணாமலைக்குச் சிங்கை ராமச்சந்திரனுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அதாவது. ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவர் சிங்கை. அதேபோல் அண்ணா மலை ஐஐஎம் லக்னோவில் படித்தவர். இரண்டு முன்னாள் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி ஆரம்பித்துள்ளது.
தகவல் தொழில் நுட்பத்துறையில் அனுபவம் உள்ளவர் சிங்கை. தேர்தல் வியூகங்கள் அமைக்கத் தெரிந்தவர். அவரும் மண்ணின் மைந்தர். இப்படியான நிலையில்தான், சிங்கை அவரது எக்ஸ் தளத்தில், 'ஐ யாம் வெயிட்டிங்' என்று அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகதான் 2வது கட்சி என அடிக்கடி அண்ணாமலை சொல்லி வருகிறார். அதை அவர் நிரூபித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் சுமார் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கு மேல் உள்ளன. இத்தனை இடங்களிலும் அதிமுக அடிப்படை கட்டமைப்பை வலுவாகக் கட்டி எழுப்பி உள்ளது. ஆனால், அதிமுக இணையாக இத்தனை வாக்குச் சாவடிகளுக்கும் பாஜகவுக்குப் பொறுப்பாளர்கள் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்தான்.
65 ஆயிரம் வாக்குச்சாவடிக்குப் பொறுப்பாளர்கள் கூட போடமுடியாமல் போதாமையில் உள்ள ஒரு கட்சி தமிழ்நாட்டில் 2வது இடத்தில் உள்ளது என்றால் பிறகு யாரும் நம்ப மாட்டார்கள்.
இந்த மாதிரியான பிரச்சினைகள் அண்ணாமலை முன்னால் பெரும் சவால்களாக உயர்ந்து நிற்கின்றன. எப்பாடு பட்டாவது அண்ணாமலை வெற்றி பெற்றாக வேண்டும். இல்லை என்றால், அவருக்கு இது 2வது தோல்வியாகி விடும்.
திமுக, அண்ணாமலையை டார்கெட் செய்து உள்ளது. அவரை எப்படியாவது வீழ்த்தியே ஆக வேண்டும் என்று தேவை அந்தக் கட்சிக்கு உள்ளது. இதை எல்லாம் அறிந்துதான் அண்ணாமலை எஸ்கேப் ஆனார்.
தேர்தலில் நின்று தோற்க நேர்ந்தால், அண்ணாமலை இதுவரை ஊடகத்தின் மூலம் ஊதி பெரியதாகக் காட்டிய பிம்பம் பொய்யாகி விடும். அதிலும் கெளரவமான தோல்வியாக இருந்தால், பரவாயில்லை. தப்பிப்பார்.
இதே இடத்தில் தமிழிசை இருந்தால் வெற்றிகரமான தோல்வி என்று சொல்லி வார்த்தை ஜாலம் ஆடி சமாளித்துவிடுவார். அப்படி ஜாலங்கள் தெரிந்தவர் அல்ல அண்ணாமலை.
இன்றைய கள நிலவரப்படி பாஜகவுக்குத் தமிழ்நாட்டில் சாதகமான வாய்ப்புகள் இல்லை. அதிமுக தலைமையிலிருந்திருந்தாலும் கூட பாஜக கரையேறி இருக்க முடியாது.
இந்தத் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறி உள்ளது. அண்ணாமலை தந்த பில்ட் அப்புக்கு டெப்பாசிட் ஆவது வாங்கியாக வேண்டும். அப்படி என்றால் பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். 16% வாக்குகளைப் பெற்றால்தான் கட்டுத் தொகையைக் கைப்பற்ற முடியும்.
பாஜக தோல்வியைச் சந்தித்தாலும் அவர் மீது கட்சி பெரிய நடவடிக்கைகளை எடுக்காது. ஏனெனில் களநிலவரம் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரியும். அப்படி கள நிலவரம் அறிந்திருந்தும் கடந்த 3 மாதங்கள் முன்னால் தமிழகம் வந்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.
உளவுத்துறை அறிக்கை அவர்களில் தான் இருக்கிறது. அவருக்குத் தெரியாதா? கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசித்தான் ஆகவேண்டும். பொதுவாக பாஜக நீண்ட கால செயல்திட்டத்தில் அடிப்படையில் செயல் படும் ஒரு கட்சி.
அப்படியான ஒரு நீண்டகால திட்டத்தின் அடிப்படையில்தான் அண்ணாமலை கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். இந்திய அளவில் உள்ள மாநிலங்களில் 39 தொகுதிகளில் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட டெப்பாசிட் கூட வாங்க முடியாது நிலையில் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதை முதலில் மாற்றிக் காட்ட வேண்டும். அதன்பின்னர் தான் ஆட்சி அதிகாரம் எல்லாம்.
அதற்காகத்தான் அண்ணாமலை கோவையில் நிறுத்தப்பட்டுள்ளார். ராஜ்ய சபா எம்.பி.ஆக உள்ள எல். முருகன் நீலகிரியில் களம் இறக்கப்பட்டுள்ளார். ஆளுநராக இருந்த தமிழிசை தென் தென்னையில் நிற்க உள்ளார். இவை எல்லாம் நீண்ட கால திட்டங்கள்தான்.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications