செங்கோட்டையன் விவகாரம்.. பாஜகவின் சித்து விளையாட்டுகளில் ஒன்றா? - திருமாவளவன் கேள்வி
கோவை: செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறியதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணமா அல்லது பாஜகவின் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது: குளிர்கால கூட்டத் தொடரில் வாக்காளர் SIR குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தவும், அவையை ஒத்தி வைப்பதற்கு மற்றும் பிரச்சனைகளை எழுப்புவதற்கான சூழல் இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவையை ஒத்திவைத்து அதனை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு தழுவிய அளவில் 25க்கும் மேற்பட்ட பூத் லெவல் ஆபீசர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியும் இது குறித்து கடுமையாக ஒன்றிய அரசை எச்சரிக்கும் வகையில் விமர்சித்துள்ளார். எனவே, எதிர்க்கட்சிகள் இது குறித்து கடுமையான வகையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பும் என நம்புகிறேன்.
இலங்கையில் புதிதாக அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஏபிபி அரசு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் அனுரதிசநாயக்கே புதிய அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் இந்திய ஒன்றிய அரசு தலையீடு செய்து புதிய அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி நிர்வாக முறையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஈழ தமிழர்கள் விரும்புகின்றனர்.
இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க கூடிய வகையில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசுக்கு இதனை எடுத்து செல்வோம். முதல்வரும் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
SIR வாக்காளர் பட்டியல் சீராய்வாக இருந்தால் பிரச்சனை அல்ல. தற்பொழுது 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எந்த ஆவணமும் தருவதற்கு தேவையில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கூறியுள்ள 13 ஆவணங்களில் ஒரு ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்பது குடியுரிமையை சோதிக்க கூடிய ஆவணம். எனவே, அவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று விமர்சித்தார்.
சிஏஏ சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்தாமல் அதிகாரம் அற்ற ஒரு நிறுவனத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இந்த செயலில் ஈடுபடுகின்றனர். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு போக்கு. இதன் மூலம் பத்து சதவீதத்தில் இருந்து 15 சதவீத வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளது. பீகாரில் 43 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான்.
நீதிமன்றங்களில் e filing முறையை வழக்கறிஞர்கள் பலரும் எதிர்த்து வருவது குறித்தான கேள்விக்கு, அனைத்தையுமே தற்பொழுது டிஜிட்டல் முறை செய்து வருகின்ற சூழலில் அந்த நடவடிக்கை நீதிமன்றத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. அதில் உள்ள நல்லது கெட்டது குறித்து ஆய்வு செய்து சொல்ல வேண்டும். அந்த முறை அனைவராலும் எளிதாக செய்யக்கூடிய ஒன்று அல்ல. எனவே, அந்த முறையில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருதுகிறேன்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக ஆளாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படும் போக்கு நீடித்து வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பு உணர்வை தூண்ட வேண்டும் எனபது அவர்களது நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. இதனை மெட்ரோ ரயில் திட்டத்திலும் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை விசிக மீண்டும் கண்டிக்கிறோம்.
ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதனை கைவிட வேண்டும். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு, செங்கோட்டையன் அதிமுகவில் ஒரு மூத்த தலைவர். அவர் அதிமுகவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அந்த கட்சிக்கு உகந்தது அல்ல. அவர் தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்தது அவருடைய முடிவு. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதிமுகவை இப்படி ஒரு நெருக்கடிக்கு தள்ளியதில் பாஜகவிற்கு பங்கு உள்ளது.
செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று வந்த பிறகு என்னை அழைத்தது அமித்ஷா என்று கூறி இருக்கிறார். பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் அதிமுகவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய சூழலில் இது எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்ற கேள்வி எழுகிறது. பாஜகவினரால் செங்கோட்டையனுக்கும் பழனிச்சாமிக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையா?.
அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடக்கூடிய பாஜக இந்த பிரச்சனையில் ஏன் வெளிப்படையாக தலையிடவில்லை. அவர்களை சேர்த்து வைக்க ஏன் முயற்சிக்கவில்லை. அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஏன் அவர்கள் விரும்பவில்லை. அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது. இதுபோன்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது.
எனவே, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறியதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணமா அல்லது பாஜகவின் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என்பதை ஏற்கனவே கூறி இருக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்விக்கு, எங்களுக்கு சொந்த சின்னம் பானை சின்னம் கிடைத்துவிட்டது என்றார்.
-
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications