எடப்பாடி பழனிசாமியை மிரட்டும் பாஜக.. கோவையில் கொதித்த திமுக மா.செ.
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மிரட்டுகிறது என்றும், பாஜகவுடன் கைகோர்க்க தான் எடப்பாடி டெல்லி சென்றதாகவும் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான நிதியை கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட கணுவாய் பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் மற்றும் 100 நாள் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தொண்டாமுத்தூர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி வழங்குவோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறைக்கான பணத்தை தான் பெற்றுத் தரப் போகிறார் என்று எண்ணிய நிலையில், அவர்கள் ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்கு மோடியுடன் கைகோர்க்க சென்றுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜகவினர் கூட்டணியில் சேராவிட்டால் ரெய்டு நடத்துவோம், எனவே கூட்டணி சேர்ந்து கொள்ளுங்கள் என்று பாஜக சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் 2026 இல் மீண்டும் முதலமைச்சரானால் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித்தொகை 2,500 ரூபாயாக உயரும். மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை மோடி அரசு வழங்கவில்லை என்றால் முதலமைச்சர் சம்பாதித்து தருவார் என்றார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications