பயங்கர சூறாவளி- திடீரென சரிந்த விளம்பர பேனர்- துடிதுடித்து போன உயிர்கள்.. கோவையில் 3 பேர் பலி!
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் முக்கிய சாலைகளில் நாம் மிகப் பெரிய விளம்பரப் பலகைகளைப் பார்த்திருப்போம். முன்பு சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மட்டுமே இதுபோல முக்கிய சாலைகளில் பெரிய பேனர்கள் வைக்கப்படும்.
ஆனால், இப்போதெல்லாம் இரண்டாம் கட்ட நகரங்களிலும் கூட இதுபோன்ற பேனர்கள் வைக்கப்படுகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இதுபோல பெரிய விளம்பர பலகைகளை வைக்கும் முறை அதிகரித்தே வருகிறது.

விளம்பரப் பலகை: பொதுவாக இந்தியாவில் இதுபோன்ற விளம்பர பலகைகளுக்குப் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு இடத்தில் எந்தளவுக்குக் காற்று அடிக்கிறது, விளம்பரப் பலகை வைக்கப்படும் இடத்தின் தன்மை ஆகியவை குறித்து எந்தவொரு ஆய்வும் செய்யாமல் அனைத்து இடங்களிலும் ஒரே போல இரும்பு கம்பிகளை வைத்து விளம்பரப் பலகைகளை வைக்கிறார்கள். இவை அதிக காற்று அடித்தால் தாங்கும் வகையில் இருப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டு தான் இருந்தது.
இந்தச் சூழலில் தான் கோவையில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடந்துள்ளது. அங்கே இன்று புதிதாக விளம்பரப் பலகையை வைக்கும் பணிகள் நடந்துள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது.
விபத்து: இதனால் விளம்பரப் பலகை ஆட தொடங்கியுள்ளது. இதை உணர்ந்தவுடன் விளம்பரப் பலகையைக் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து இறங்கித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதற்குள் அந்த விளம்பரப் பலகை சரிந்துள்ளது. இதனால் அங்கே இருந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் விளம்பரப் பலகை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த விளம்பர பலகை வைக்கும் பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் காண்டிராக்ட் எடுத்துள்ளார். அவர் இப்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணிகளில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் கருமத்தப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தோரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞர்களை அடையாளம் காணும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், வேறு யாரேனும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த விபத்து எப்படி நடந்தது.. அதீத காற்றால் இந்த அசம்பாவிதம் நடந்ததா இல்லை, விளம்பரப் பலகையைத் தாங்கி நிற்கும் கம்பி போதிய வலுவாக இல்லாததால் விபத்து நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விளம்பரப் பலகை வைக்கும் பணிகளில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications