வீடியோ.. எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் ஆக்ரோசமாக சண்டை போட்ட நாய்கள்.. முடிவு அதிரடி
Recommended Video
கோவை: கோவை அருகே தோட்டத்தில் நுழைந்த விஷ பாம்புடன் மூன்று நாய்கள் சண்டையிட்டு, உரிமையாளரை காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
பொதுவாக நாய்கள் தன்னை வளர்க்கும் எஜமானுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும். அவருக்காக உயிரை கூட கொடுக்கும் அளவுக்கு விசுவாசமாக செயல்படக்கூடியவை.
அப்படித்தான் கோவை அருகே வளர்ப்பு நாய்கள் தனது எஜமானுக்காக பாம்புடன் சண்டை போட்டிருகின்றன. அத்துடன் அவற்றை கடித்துக்குதறி கொன்றுள்ளன.

விவசாய தோட்டம்
கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் அருகேயுள்ள பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அப்பகுதியில் அவருக்கு வீட்டுடன் சேர்த்து விவசாய தோட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு மாடுகளுக்கு தீவனம் வைக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.

6 அடி நீள விஷ பாம்பு
இவர்களுடன் ராமலிங்கம் வளர்த்து வரும் 3 நாய்களும் சென்றன. அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த வழியில் சுமார் 6 அடி கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக வந்தது.

நாய்கள் சண்டை
இதனை பார்த்து ராமலிங்கம் அச்சமடைந்து தனது நண்பருடன் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றார்கள்.. அப்போது ராமலிங்கத்துடன் வந்த 3 வளர்ப்பு நாய்கள், பாம்புடன் சண்டையிட்டுள்ளது. 3 நாய்களும் சேர்ந்து பாம்பை கடித்து குதறி கொன்றது.

பாம்பை கொன்ற நாய்கள்
பாம்புடன் சண்டையிட்டு வளர்ப்பு நாய்கள் உரிமையாளரை காப்பாற்றும் இந்த காட்சிகளை ராமலிங்கத்தின் நண்பர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். வளர்ப்பவருக்கு ஒரு ஆபத்து என்ற உடன் உடனடியாக செயல்பட்டு பாம்பை நாய்கள் கொன்ற சென்ற செயல் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications