திருச்சூர் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையனுக்கு வலது கால் பறிபோனது.. கோவையில் சிகிச்சை
கோவை: கேரள மாநிலம் திருச்சூரில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த ஏ.டி.எம். கொள்ளையன் அசார் அலியின் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கோவையில் உள்ள மருத்துவமனையில் தற்போது கொள்ளையன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோலழி பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்பட மொத்தம் 3 ஏடிஎம் மையங்களில் கடந்த வாரம் கொள்ளையடித்தது ஹரியாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல். அப்படி கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை எடுத்துக்கொண்டு கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்றனர்.

இவர்கள் திருச்சூரில் இருந்து பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக தப்பி நாமக்கல் மாவட்டத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் குமாராபாளையம் அருகே கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டர் தவமணியை தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பியோடினர். அப்போது, தற்காப்புக்காக ஜூமாந்தீன் என்பவனை இன்ஸ்பெக்டர் தவமணி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜூமாந்தீன் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்து போனான்.
மற்றொரு கொள்ளையன் அசார் அலி தப்பி ஓடும் போது போலீசார் அவனது காலிலும் சுட்டனர். இதில் 2 கால்களிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அசார்அலி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அதன் பிறகு அசார் அலியை மேல் சிகிச்சைக்காக போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தார்கள். கோவை அரசு மருத்துவமனையில் அசார் அலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குமாரபாளையம் நீதிபதி மாலதி கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து அசார் அலியின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இந்தநிலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த அசார் அலியின் வலதுகாலில், ரத்த குழாய் பாதிப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்டது. இதைத்தொடர்ந்து அசார் அலியின் உயிரை காப்பாற்றுவதற்காக அறுவை சிகிச்சை மூலம் நேற்று மாலை வலதுகால் முழங்காலில் இருந்து அகற்றினார்கள். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொள்ளையன் சிகிச்சை பெற்றுவருவதால் கோவை அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications