வர்ற 5-ம் தேதி மனைவிக்கு வளைகாப்பு.. காரில் சென்ற செய்தியாளர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில்!
திருப்பூர் அருகே கார் விபத்தில் செய்தியாளர் பலியானார்
Recommended Video
கோவை: வர்ற 5-ம்தேதி மனைவிக்கு வளைகாப்பு.. காரில் சென்று கொண்டிருந்த ரிப்போர்ட்டர் ராஜசேகரும், அவரது தாயாரும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட ரிப்போர்ட்டர் ராஜசேகர்.. 32 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகி 7 மாதம்தான் ஆகிறது.. இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

முதல் குழந்தை என்பதால், அடுத்த வாரம் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய திட்டமிருந்த ராஜசேகர், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று சொந்தக்காரர்கள் கல்யாணத்துக்காக தன்னுடைய அம்மா யமுனா ராணி 52, சகோதரி பானுப்பிரியா 31, மற்றும் இவரது 2 வயது குழந்தை இன்ப நித்திலனை காரில் அழைத்து சென்றிருந்தார்.

திருமணத்தை முடித்துவிட்டு கோவை மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அவிநாசி நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்ற போது, ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.. பஸ்சுடன் பலமாக வந்து மோதியதில், ராஜசேகரும், யமுனா ராணியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

சகோதரி பானுப்பிரியா, குழந்தை இன்ப நித்திலன் ஆகியோர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்... அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. அடுத்த வாரம் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்ய ஆசையாக இருந்த நிலையில், செய்தியாளர் தனது தாயாருடன் மரணம் மரணமடைந்தது பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications