டாஸ்மாக் கடைகளை இரண்டு நாளைக்கு மூட வேண்டும்.. தமிழக அரசு அதிரடியாக உத்தரவு
கோவை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபார்கள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்து வகை மதுவிற்பனை கூடங்களும் வருகிற 26-ந் தேதி (குடியரசு தினம்) மற்றும் 1-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஆகிய 2 நாட்கள் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் விதிமுறைப்படி, தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் 'உலர் நாள்' கடைபிடிக்கப்பட வேண்டும். எனவே ஜனவரி 26ம் தேதியான வரும் திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபார்கள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் மூடப்படுகிறது.

அதேபோல் வள்ளலார் தினமான வரும் பிப்ரவரி 1ம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் என்பது சந்திரனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திதி/நட்சத்திர விழா ஆகும். அன்று முருகன் கோவிலில், விசேஷமாக இருக்கும். பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்பட புகழ் பெற்ற முருகன் கோவில் அனைத்திலும் விஷேகமாக இருக்கும். அதே நாளில தான் கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சித்தியடைந்ததும் வருகிறது. எனவே ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தான் வடலூரில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.
தமிழக அரசு இந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்திற்காக டாஸ்மாக் விடுமுறையை அறிவிக்கிறது. அதன்படியே தைப்பூச நாளான பிப்ரவரி 1ம் தேதி தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி வருகிற 26-ந் தேதி (குடியரசு தினம்) மற்றும் 1-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்து உள்ளார்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications