கல்வி நிறுவனங்களில் தொடரும் ஷாக்.. மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் கைது!
கோவை; கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன் கடந்த சனிக்கிழமை மாணவிகள் சிலர் பேராசிரியர் பாலியல் ரீதியாக பேசி இரட்டை அர்த்தம் பட சேட் செய்வதாகவும் சீண்டலில் ஈடுபடுவதாகவும் கல்லூரி முதல்வரிடம் புகாரளித்தனர்.
Recommended Video
பின்னர் கடந்த 16-ம் தேதி மாணவிகள் கைப்பட புகார் அளித்தனர். மாணவர் அமைப்பினரும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து பேராசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பேராசிரியர் மீது புகார்
மாணவிகளிடமும் புகார் குறித்து கேட்டறியப்பட்டது. கல்லூரி தரப்பில் உயர்கல்வித்துறை உயர்திகாரிகள் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி சட்டபூர்வ நடவடிக்கை தேவை என மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கைது செய்தனர்
இந்த நிலையில் கல்லூரியில் மாணவி அளித்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை பேராசிரியர் ரகுநாதனை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல்
மானபங்கப்படுத்துதல் (354), கடத்தல் (365), கொலை மிரட்டல் (506(2)) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. அவரை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவலர்கள் முடிவு செய்துள்ளனர்

கோவை சம்பவம்
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசிரியர் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஆசிரியரின் கொடூர செயலால் மனவேதனை அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியை சீரழித்த காமக்கொடூர ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டான். காமக்கொடூர ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்ட்டுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications