சீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என எண்ண வேண்டாம்.. ஒரு காலமும் அது நடக்காது.. K.s.அழகிரி மெசேஜ்..!
கோவை: சட்டமன்றத் தேர்தல் சீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என யாரும் எண்ண வேண்டாம் என்றும் அது ஒரு காலமும் நடைபெறாது எனவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை கருமத்தாம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி இதனைக் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் சூழலில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ள இந்த கருத்து யாரை மனதில் வைத்து என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏர் கலப்பை பேரணி
மத்திய அரசின் விவசாயிகள் சட்டத்தை கண்டித்து கோவை கருமத்தாம்பட்டியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவுக்கு சூசகமாக ஹாட் மெசேஜ் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

தேவையான சீட்
சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தலைகுனிந்து நிற்கும் என எண்ண வேண்டாம் என்றும் அது ஒரு காலமும் நடக்காது எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும், சீட் பங்கீடு விவகாரத்தில் அதிகமாகவும் கேட்கமாட்டோம், குறைவாகவும் கேட்கமாட்டோம் எனத் தெரிவித்த கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சிக்கு தேவையான சீட்களை மட்டுமே கேட்டுப் பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாடகம் நடத்துவார்கள்
இதனிடையே நாடகம் அரங்கேற்றுவதில் அதிமுகவினர் கெட்டிக்காரர்கள் என்றும் அமித்ஷாவிடம் அவர்கள் என்ன நாடகத்தை நடத்தியுள்ளார்கள் என்ற விவரம் தனக்குத் தெரியவில்லை எனவும் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். அமித்ஷாவின் வருகை அதிமுக தலைமைக்கு பயத்தை கொடுத்துள்ளதாகவும் அதனால் தான் விமான நிலையத்திற்கெ சென்று வரவேற்பு கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

மாறுபட்ட கருத்து
திமுக கூட்டணியில் சீட் பேரம் பேசமாட்டோம் என கடந்த வாரம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்திருந்த நிலையில், யாருக்கும் தலைகுனியமாட்டோம் என இந்த வாரம் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். திமுகவை மனதில் வைத்தே கே.எஸ்.அழகிரியிடம் இருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications