ஊட்டிக்கு இனி ஈஸியாக போகலாம்.. ரூ. 250 கோடியில் மெகா திட்டம்.. குட் நியூஸ் சொன்ன எ.வ. வேலு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச்சாலை, அவிநாசி சாலை புதிய மேம்பாலம், சாய்பாபா காலனி மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கோவை வரவுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு அந்த திட்டங்களின் அப்டேட்டுன், வெளியூர்களில் இருந்து எளிதாக ஊட்டி செல்வதற்காக புதிதாக 4 வழிச்சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த 3 ஆண்டுகளில் 664 கி.மீ சாலைகளை விரிவுபடுத்தி, மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.997 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 652 கி.மீ சாலைகள் மேம்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன.

ooty e v velu

மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதியாண்டில் மேலும் 148 கி.மீ சாலை மேம்படுத்துவதற்காக ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ.5 கோடி மதிப்பில் இரண்டு மேம்பாலங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மேற்கு புறவழிச்சாலையில் சுமார் 32 கி.மீ உள்ளது. இதை 3 கட்டமாக பிரித்துக் கொண்டு முதல்கட்டமாக 12 கி.மீ, இரண்டாவது கட்டமாக 12 கி.மீ மூன்றாவது கட்டமாக எஞ்சியுள்ள பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்ட பணிகளுக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல்கட்ட பணிகள் முடிவடையும்.

கோவை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தான் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. அவிநாசி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. அங்கு ரூ.1,700 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவடையும். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை மூலம் மூன்று மேம்பாலங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, டெண்டர் வரை வந்து நின்றுவிட்டது. தொழில் நிறுவனங்கள், மக்களிடம் கருத்து கேட்டபோது, முதல்கட்டமாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கூறினார்கள். அதனடிப்படையில் மூன்று மேம்பாலங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதலில் சாய்பாபா காலனி பகுதியில் ரூ.75 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலைத்துறையில் தரக்கட்டுப்பாட்டில் எந்த சமரசமும் செய்வதில்லை. சிங்காநல்லூர் மேம்பாலத்துக்கு டெண்டர் விடப்பட உள்ளது. சரவணம்பட்டி மேம்பால பணிகளும் விரைவில் தொடங்கும். நான் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்துள்ளேன். அப்போதிருந்த நிலை இப்போது மாறியுள்ளது. வாகனங்கள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மக்கள் கோரிக்கை அடிப்படையில் கூடுதல் பாலம் கட்டப்படும்.

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் விவசாயிகளும், தொழில்நிறுவனங்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களின் கோரிக்கை மற்றும் தேவை அடிப்படையில் தான் புதிய சாலை அமைக்கப்படுகிறது. அப்படித்தான் இந்த பசுமை வழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. எந்த திட்டம் வந்தாலும் அதை எதிர்ப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். தகராறு செய்பவர்களே அந்த சாலையில் தான் செல்கிறார்கள்.

விவசாயம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. நானே விவசாயி வீட்டு பிள்ளைதான். இப்போதும் நான் விவசாயம் செய்கிறேன். திட்டங்களால் என்ன நன்மை, பொருளாதாரத்தில் என்ன வளர்ச்சி என்று தெளிவுபடுத்துகிறோம். இங்கும் விவசாயிகளை சந்தித்து தெளிவுபடுத்த முயற்சி செய்வோம்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவிநாசி - மேட்டுப்பாளையம் இடையே ரூ.250 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். இதனால் வெளியூர்களில் இருந்து வருவோர் கோவை வராமல் நேரடியாக ஊட்டி செல்ல முடியும். இதனால் கோவைக்கு வரும் போக்குவரத்தும் குறையும். என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+