பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு- கோவையில் கறுப்புக் கொடி- தாராபுரத்தில் கறுப்பு பலூன்கள்!
கோவை: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கறுப்பு கொடி காட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தாராபுரத்தில் கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம், கேரளா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை கோவை வருகை தந்தார். அங்கிருந்து கேரளாவின் பாலக்காடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று கோவை பீளமேடு பகுதியில் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கறுப்பு பலூன்களை கட்டிய விவசாய சங்கத்தினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்பு பலூன்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications