உயர் அதிகாரி டார்ச்சர்.. தாங்க முடியலை.. போலீஸ் வேலையே வேண்டாம்.. திருநங்கை காவலர் நஸ்ரியா கண்ணீர்
பாலினத்தை கூறியும் ஜாதியை குறிப்பிட்டும் தன்னை உயரதிகாரி அவமதிப்பதாக திருநங்கை காவலர் நஸ்ரியா கண்ணீர் பேட்டி
கோவை: தனது பாலினம் குறித்தும் ஜாதி குறித்தும் இழிவாக பேசி மனதை துன்புறுத்துவதால் நான் வேலையை ராஜினாமா செய்ய போகிறேன் என கோவை மாநகர காவல் துறையில் காவலராக இருக்கும் திருநங்கை நஸ்ரியா பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் துறையில் திருநங்கை நஸ்ரியா பணிபுரிந்து வருகிறார். தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் இதற்கு முன்பு ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.
அங்கு ஒரு பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் கோவைக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கோவை ஆணையர்
இந்த நிலையில் ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திருநங்கை நஸ்ரியா வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவல் துறையில் பணியில் சேர்ந்தது முதல் பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகிறேன். இந்த நிலையில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை எனது பாலினம் குறித்தும் ஜாதி குறித்தும் இழிவாக பேசியிருந்தார். மன ரீதியில் எனக்கு டார்ச்சல் செய்தார். என்னால் இனி காவல் துறையில் பணியில் நீடிக்க முடியாது.

ராஜினாமா
எனவே எனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறேன். கடிதத்தை கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன் என்றார். இதையடுத்து நஸ்ரியாவை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்த காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார்.

புகார்
அப்போது நஸ்ரியாவின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு, எழுத்துபூர்வமாக புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர் தற்போது தெரிவித்துள்ள புகார்கள் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் கஷ்டம்
இந்த புகார் குறித்து துணை ஆணையர் சந்தீப் சாரிப்பார் என தெரிகிறது. ஏற்கெனவே 4, 5 முறை பாலகிருஷ்ணனிடம் புகார் அளிக்க வந்தபோது சிலர் அவரை பார்க்கவிடாமல் என்னை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர் என்றும் தெரிவித்தார். 3ஆம் பாலினத்தவர்கள் என தெரிந்ததும் வீட்டை விட்டு துரத்தப்படும் தாங்கள், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கஷ்டப்பட்டு படித்து பணிக்கு சேர்க்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு சில தொல்லைகள் வருகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications