விஜயை தொடர்ந்து தரக்குறைவாக பேசும் சீமான்.. தவெகவினர் போலீஸில் புகார்
சென்னை: விஜயின் அரசியல் வருகையை ஆரம்பகட்டத்தில் வரவேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது தவெகவையும், விஜயையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். அரசியலுக்கு உங்களை எவன் வரச் சொன்னான் என்றும், போடா வாடா என்று ஒருமையிலும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், தவெக தலைவர் விஜயை தொடர்ந்து மரியாதை குறைவாகவும், இரு கட்சியினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சூடுபிடிக்கும் அரசியல் களம்
தமிழ்நாடு 2026 தேர்தல் களம் இப்போதிருந்தே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இப்போதிருந்தே சூடுபிடித்து வருகிறது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன.

சீமான் கடும் விமர்சனம்
மறுபக்கம் இரண்டு கழகங்களுக்கும் கடுமையான போட்டி கொடுத்து, தங்களின் இருப்பை நிரூபிக்க நாம் தமிழர், தவெக முயற்சித்து வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என கூறிவிட்டது. தவெக தங்கள் தலைமையில் வலிமையான கூட்டணி உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. முன்பு விஜயைப் பற்றி பேசும்போதெல்லாம் தம்பி என்று பாசத்தோடு கூறி வந்த சீமான், தற்போது தமிழக வெற்றி கழகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தவெகவினர் சீமான் மீது புகார்
நாம் தமிழர் கட்சியினர் தான் சமூக வலைதளங்களில் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து மரியாதை குறைவாகவும், இரு கட்சியினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீஸில் புகார்
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியுள்ளதாவது: "கோவை டவுன்ஹால் பகுதியில் கடந்த 14 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசும்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
அவமரியாதை
தவெக தலைவர் விஜய் வழியில் அமைதியுடன் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் தவெவினர் செயல்பட்டு வரும் நிலையில், சீமான் விஜயை தொடர்ந்து அவமரியாதையாக பேசிவருவது தங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து பேசிவந்தால் இரு கட்சியினரிடையே கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இரு கட்சியினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், விஜயை தரைக்குறைவாக பேசும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications