Coimbatore Woman Kidnap: கோவை இருகூர் கடத்தல் வழக்கில் டிவிஸ்ட்! சம்பந்தப்பட்ட பெண் அளித்த விளக்கம்
கோவை: கோவை இருகூரில் காரில் பெண் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் திடீர் திருப்பம் வந்துள்ளது. அதாவது தம்பதி இடையே நடந்த தகராறை கடத்துவதாக எண்ணி பெண் ஒருவர் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இருகூரை அடுத்த அத்தப்ப கவுண்டன்புதூர் சாலையில் உள்ள ஒரு இடத்தில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி மாலை ஒரு கார் நின்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
அந்த காரில் பெண் ஒருவரை மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
காவல் துறை ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. சிங்காநல்லூர் போலீஸார் தகவல் கிடைத்த இடத்திற்குச் சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரித்தனர்.
கார் எந்த பகுதியில் தென்பட்டதோ அந்த பகுதியில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். இதையடுத்து காரில் இருந்தவர்களின் வீட்டை கண்டறிந்து போலீஸார் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது விசாரணையில் காரில் பயணித்தவர்கள் கணவன்- மனைவி என்பதும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறை கடத்தல் என நினைத்துக் கொண்டு பெண் ஒருவர் புகார் கொடுத்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக மாநகர காவல் துறையினர் நேற்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'காரில் பயணித்தவர்கள் இருகூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர். பொருட்கள் வாங்குவது தொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அத்தப்ப கவுண்டன் புதூர் சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு செய்து கொண்டே வாகனத்தை எடுத்துச் செல்லும் போது, தம்பதி இடையே நடந்த கூச்சலை பார்த்த ஒருவர், யாரோ ஒரு பெண்ணை காரில் கடத்துகிறார்கள் என்று நினைத்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காரில் கடத்தல் சம்பவம் நடந்ததாக தெரிவித்த நபரையும் கண்டறிந்து விசாரித்தபோது, காரில் யாரும் கடத்தப்பட்டதாக தான் பார்க்கவில்லை என்றும், காரில் இருந்தவர்கள் அதில் இருந்த ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதை, கூச்சலிட்டத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது.
அது போல் காரில் பயணித்த அந்த பெண் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் "நானும் எனது கணவர், மகன் ஆகியோர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது, பழங்கள் வாங்கலாம் என என் கணவர் கூறினார். என்னை இறங்கி வாங்குமாறு தெரிவித்தார். ஆனால் நான் இறங்க மறுத்துவிட்டேன்.
அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு நான் காரில் இருந்து கீழே இறங்கப் பார்த்தேன். அப்போது "வீட்டுக்கு சென்று பேசிக் கொள்ளலாம்" எனக் கூறினார். அப்போது அவர் என்னை அடித்தார். நான் திரும்ப அடித்தேன். காரில் இருந்த மகன், "ஏன் மானம் மரியாதையை வாங்குறீங்க" என எங்களை கண்டித்துவிட்டு, காரை எடுக்க கூறினார். நாங்கள் புறப்பட்டு வந்துவிட்டோம். இதுதான் நடந்தது" என்றார்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications