பாதுகாவலர் துப்பாக்கியை ஏன் வாங்க வேண்டும்? கோவை டிஐஜி தற்கொலையில் 2 மர்மங்கள்.. ஷாக்கிங்!
கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தமிழ்நாட்டை உலுக்கி உள்ள நிலையில் அவர் தற்கொலை தொடர்பாக இரண்டு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர்.
அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
எப்போதும் காலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கும் கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்றும் வாக்கிங் சென்று உள்ளார். வாக்கிங்கில் சில சக அதிகாரிகளை பார்த்து இயல்பாக பேசி இருக்கிறார். காலை 5 மணிக்கு வாக்கிங் சென்றவர் காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
முதலில் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு அங்கிருந்து கேம்ப் ஆபிஸ் வந்துள்ளார். அங்கே வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார். உங்க துப்பாக்கியை கொடுங்க என்று ரவியிடம் ஆர்டர் போட்டு உள்ளார் விஜயகுமார் .
இவர் உயர் அதிகாரி என்பதால் ரவியும் துப்பாக்கியை கொடுத்துள்ளார். ஆனால் அப்போதே அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. விஜயகுமார் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சில நிமிடங்கள் இங்கும் அங்கும் சென்றுள்ளார். இதையடுத்து விஜயகுமார் சில நிமிடங்கள் கழித்து தனது அறைக்கு சென்று தாழ்பாள் போட்டுள்ளார்.
உள்ளே சென்றவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். அறிக்கைகளின்படி, விஜயகுமார் தனது காலை நடைப்பயணத்திலிருந்து காலை 6.20 மணியளவில் வீடு திரும்பினார், மேலும் 6.40 மணிக்கு கேம்ப் ஆபிஸ் வந்துள்ளார். 6.45 மணிக்கு தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கியை ஒப்படைக்குமாறு கூறினார். காலை 6.50 மணியளவில் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இரண்டு சந்தேகம்: அவர் தற்கொலையில் இரண்டு சந்தேகம் உள்ளது. தற்கொலை செய்ய வேண்டியவர் ஏன் வீட்டிலேயே செய்யாமல் அலுவலகம் வந்தார். அதோடு ஏன் பாதுகாலவர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் குடும்பம் கோவைக்கு வந்துவிட்டதால் வீட்டில் தற்கொலை செய்ய மனமின்றி அலுவலகம் வந்து இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் கூட ஏன் பாதுகாலவர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது
அதே போல நேற்றிரவு கூட துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார். ஆனால் இன்று அதிகாலை அதிர்ச்சி தரும் விதமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் கடந்த 2 வருடங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக தூக்கமின்றி இன்சோம்னியா மூலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அதோடு போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் அது பற்றி தெரிவித்து இருந்துள்ளார்.
இத்தனை காலம் இந்த பாதிப்போடு வாழ்ந்து வந்தவர், சிரித்த முகத்தோடு இருந்தவர் இன்று திடீரென தற்கொலை செய்யும் அளவிற்கு நடந்தது என்ன என்ற இரண்டாவது சந்தேகமும் எழுந்துள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications