இளைஞரிடம்.. மசாஜ் சென்டர்.. ஜாலி.. ஆசை வார்த்தை கூறிய புரோக்கர் சங்கீதா.. 2 பெண்களை மீட்ட போலீஸ்

கோவை அருகே விபச்சார புரோக்கர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: பஸ் ஸ்டேண்டில் நின்றுகொண்டிருந்தவரிடம், வலிய வந்து.. மசாஜ் சென்ட்டர், அழகிகள், உல்லாசம்.. என்ற ஆசை வார்த்தைகளை கூறிய பெண் உட்பட 2 விபச்சார புரோக்கர்களை போலீசார் அள்ளிக் கொண்டு போய்விட்டனர்.

கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்தவர் பாரதிராஜன். 30 வயதான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் சூலூர் பஸ் ஸ்டாண்டில் அருகே நின்று கொண்டிருந்தார்.

Two young girls recovery in Sulur Massage center

அப்போது அங்கு 2 பேர் வந்தனர்.. அவர்கள் விபசார புரோக்கர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். ஒருவர் பெயர் சங்கீதா, இன்னொருவர் பெயர் சுரேஷ். சங்கீதாவுக்கு 34 வயது.

காதல் விவகாரம்.. ஹாஸ்டலில் நேபாள மாணவர் தற்கொலை.. கோவை வேளாண் பல்கலையில் பரபரப்பு!

மசாஜ் சென்டர் ஒன்றில் அழகிகள் உள்ளதாகவும், பணம் தந்தால் அவர்களிடம் ஜாலியாக இருக்கலாம் என்றும் சங்கீதாவும், சுரேஷூம் பாரதிராஜனிடம் சொன்னார்கள்.

பிறகு பாரதிராஜனை எஸ்எல்வி நகரில் உள்ள மசாஜ் சென்டருக்கு அழைத்து சென்றனர். அங்கு புரோக்கர்கள் சொன்னபடியே, 2 இளம் பெண்கள் இருந்தனர். உடனே பாரதிராஜன், பணம் எடுத்து கொண்டு வருவதாக சொல்லி வெளியே வந்து, சூலூர் போலீசில் இதை பற்றி புகார் செய்தார்.

இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில், மசாஜ் செய்வதாக கூறி பெண்களை வைத்து விபச்சாரம் நடந்து வருவது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த 2 பெண்களை மீட்ட போலீசார், புரோக்கர்கள் சுரேஷ், சங்கீதாவை கைது செய்தனர்.

இவர்களை தவிர இந்த மசாஜ் சென்டருக்கு சிக்கந்தர் பாதுஷா, பாபுகணேஷ் என்ற புரோக்கர்கள் உள்ளனராம். அவர்கள் தலைமறைவாக உள்ளதால், போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+