உதயநிதி தேர்தலில் நின்று ஜெயித்தவர்.. பிறப்பால் முதல்வர் என்று எப்படி சொல்ல முடியும்.. டிடிவி தினகரன்
கோவை: உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர். அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும். புரோமோஷன் கூடாது என்பது உண்மை. தேர்தலில் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
விகடன் பதிப்பகம் சார்பில், சென்னை வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 2026 தேர்தலில் திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்றும், மன்னராட்சி குறித்தும் பேசியிருந்தார். மேலும், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இங்கு நம்முடன் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். வேங்கை வயல் சம்பவத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வெள்ளப் பாதிப்பின் போது சம்பிரதாயத்துக்கு ட்வீட் போடுவது, அறிக்கை விடுவது, வெள்ளத்தில் இறங்கி ஃபோட்டோ எடுத்துக்கொள்கின்றனர்.
இதுபோன்று இல்லாமல் உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால், இதைப் பற்றி கவலைப்படாமல் எகத்தாளமாக கூட்டடணி கட்சிகள் இருக்கிறது என 200 தொகுதிகளில் வெல்வோம். உங்களுக்கு மக்களோடு மக்களாக இருந்து ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். வரும் 2026 தேர்தலில் நீங்க நம்பிய கூட்டணி கணக்குகள் உங்களுக்கே மைனஸ் ஆக மாறும் என்று பேசியிருந்தார்.
அதேபோல ஆதவ் அர்ஜூனா பேசுகையில், தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர். அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும். புரோமோஷன் கூடாது என்பது உண்மை. தேர்தலில் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: உதயநிநி தேர்தலில் நின்று ஜெயித்தவர். அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும். புரோமோஷன் கூடாது என்பது உண்மை. தேர்தலில் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது.
எல்லா கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது வழக்கமானது. இதை ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்காது. திமுகவிற்கு ஆதரவாக பேசுகின்றேன் என்று நினைக்க வேண்டாம். அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியிடம் இருக்கின்றோம். மழை வெள்ள பாதிப்பை திமுக சரியாக கையாளவில்லை. பல மூத்த அமைச்சர்கள் இருந்தும் செய்யவில்லை. மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கின்றது
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற எடப்பாடி உதவி செய்தார். திமுகவின் பி டீம்மாக எடப்பாடி இருக்கின்றார். 2026 க்கு பின்பு அதிமுகவை மூடுவிழா காணச் செய்துவிடுவார் எடப்பாடி. கோடநாடு கொலை,கொள்ளை யாருக்காக நடந்ததோ, அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது சாட்சிகளை கலைத்துவிட்டனர்.
கோட நாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டணை பெறுவார்கள். பழனிச்சாமி பாணியில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினும் இப்போது பேசி வருகின்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துதான் வரும் தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications