கருணாநிதியாலேயே ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.. ஸ்டாலினால் நிச்சயமாக முடியாது.. ஒபிஎஸ்
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாலேயே அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்றும் ஸ்டாலினால் நிச்சயமாக முடியாதும் என்றும் துணை முதல்வர் ஒபிஎஸ் கூறினார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை இருகூர் பகுதியில் அமைச்சர் வேலுசாமி, வேட்பாளர் கந்தசாமியுடன் திறந்த வெளிவாகனத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறுகையில், இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர். இந்த தொகுதிக்காக ஏராளமான நன்மைகளை செய்துள்ளனர். தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகினற்னர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். அதேபோல் அவர் மக்களுக்கு பார்த்து பார்த்து பல தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். அந்த அடிப்படையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது. பெண்கள் பாதுகாப்பிற்கு தமிழக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது
அதிமுகவுக்கு எதிராக துரோகம் செய்து தனிக் கட்சி தொடங்கியவர்கள் காணாமல் போய்விட்டனர். அதுபோல் அதிமுகவுக்கு எதிராக துரோகம் செய்த தினகரன் அணியும் காணாமல் போய்விடும். ஜெயலலிதா உயிரை காக்க முடியாத தினகரன் அணி அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறது. கருணாநிதியாலேயே அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. ஸ்டாலினால் நிச்சயமாக முடியாது" இவ்வாறு கூறினார்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications