கோவை டாஸ்மாக் கடைகளில் நடந்த மேஜிக்.. அதுவும் தங்கு தடையில்லையாமே.. குஷியில் குடிமகன்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோவையில் 'கூலிங் பீர்' விற்பனை அமோகமாக நடப்பதாக சொல்கிறர்கள். தினமும் 4500 பெட்டிகள் வரை கூலிங் பீர் விற்பனை நடப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் சொல்கின்றன.

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் உக்கிரம் தற்போது கடுமையாக உள்ளதால், மக்கள் இளநீர், மோர், ஜூஸ் வகைகளை அதிகம் பருகிறார்கள். குடிமகன்களோ குளிர்பானைகங்களை விட கூலீங் பீரை அதிகம் நாடி வருகின்றனர். குவாட்டரும், புல்லும் அசாலட்டாக குடித்து வந்த குடிமகன்கள் ஜில் ஜில் பீர் வகைகளை அதிகம் குடிக்க தொடங்கி உள்ளார்கள்.

Up to 4500 cases of cooling beer are being sold in Tasmac stores in Coimbatore every day

இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை ஜோராக நடக்கிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் பீர் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள கோவையில் மிகப்பெரிய அளவில் விற்பனை அதிகமாக உள்ளது.

பீர்களை பொறுத்தவரை சூப்பர் ஸ்டிராங்பீர், பிளாக் நைட் மேக்ஸ் சூப்பர் ஸ்டிராங் பிரிமீயம் பீர், பிளாக் பேர்ல் டிரிபிள் சூப்பர் ஸ்டிராங் பீர், கமாண்டோ சூப்பர் ஸ்டிராங் பீர் என பல்வேறு ரக பீர் வகைகள் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகிறது. முன்பெல்லாம் எந்த பீராக இருந்தாலும் கூலிங் இல்லாவிட்டாலும் குடிமகன்கள் வாங்குவார்கள்.

இப்போது கூலிங் பீருக்குத்தான் மதிப்ப ஜாஸ்தியாக உள்ளது. மதியம் கடை திறக்கப்பட்டது முதல் கடையை அடைக்கும் நேரமான இரவு 10 மணி வரை கூலிங் பீர் கேட்டுத்தான் பல குடிமகன்கள் வருகிறார்களாம். அவர்களுக்கு தேவையான பீர்கள் அனுப்பிவைக்கப்பட்ட வண்ணம் இருக்கிறதாம்.

கோவை மாவட்டத்தில் வடக்கு தெற்கு என இரு பிரிவுகளில் மொத்தம் 280 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் மாநகரை ஒட்டி வடக்கு பகுதியில் மட்டும் 155 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளில் 195 வகையான பிராந்தி, விஸ்கி, ஓயின், ரம், ஓட்கா உள்ளிட்ட மது வகைகள் விற்பனையாகிறது. மொத்தம் 20 வகையான பீர் வகைகள் கோவையில் செய்யப்படுகிறது. இவை 650 மி.லிட்டர், 325 மி.லிட்டர் என தனித்தனி பாட்டில்களிலும், டின் பீர் வகையில் 500 மி.லிட்டர் டின்களிலும் விற்பனையாகிறது..

வெயில் இல்லாத காலக்கட்டத்தில் தினமும் 3,500 பெட்டிகள் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கோடை காலம் தொடங்கிய அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் தினமும் 4,500 பெட்டிகள் வரை பீர் விற்பனையாகிறது. அனைவரும் கூலிங் பீர் வாங்க ஆர்வம் காட்டி வருவதால் அவர்களுக்கு தேவையான கூலிங் பீர் கிடைக்க டாஸ்மாக கடைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூலிங் பீர் தங்கு தடையின்றி கிடைப்பதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+