விஜய் நாகரிக அரசியலில் இவ்வளவு ட்விஸ்டா.. இதை நோட் பண்ண மறந்துட்டோமே.. பாயிண்டை பிடித்த வானதி
கோவை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான தூயசக்தி என்று கூறியுள்ள விஜய் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவை ஏற்று, அவர்களின் அமைச்சரவையில் இடம் பெற வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் நாகரிக சந்திப்பு ஊழல் முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக்கூடாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சித் தலைவர்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார். ஆட்சி அமைத்த பிறகு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கட்சித் தலைவர்களை சந்திப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்காமல், தேர்வு செய்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்துள்ளார்.

அரசியல் களத்தில் நேர் எதிராக நிற்பவர்களையும், சித்தாந்த ரீதியாக எதிர் துருவத்தில் இருப்பவர்களையும் சந்திப்பதே அரசியல் நாகரிகம். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியைத் தக்க வைக்கவே, இந்த 'நாகரிக அரசியல் பயணம்' என்ற விமர்சனத்தையும் புறந்தள்ளி விட முடியாது. முந்தைய திமுக அரசு மீதும், அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தித் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது.
திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கு ஊழலும், சட்ட ஒழுங்கு சீரழிவும் தான் முக்கிய காரணம். திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது, ஊழல் செய்ததற்கான ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யுமாறு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனாலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. முதலமைச்சர் ஜோசப் விஜய் 'நாகரிக சந்திப்பு', ஊழல் வழக்குகளில் இருந்து, திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது.
எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதோ, அது குறித்து முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் புதிய கட்சியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். எனவே, ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிவிடக் கூடாது. இதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்"என்றார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்!












Click it and Unblock the Notifications