அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை வடக்குத் தொகுதியைக் கைப்பற்றுவதில் அண்ணாமலைக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வரும் தேர்தலில் கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Annamalai

கோவை வடக்குத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாரா, வானதி சீனிவாசன் போட்டியிடுவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் உள்ளது.

இந்தியாவில் 70% எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. போர் காரணமாக நமக்கு வரவேண்டிய எண்ணெய் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் சீரான விநியோகம் செய்து வருகிறோம். பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மேலும், நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ₹10 குறைத்துள்ளது. இதனால் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 11 கோடி மக்களுக்கு LPG சிலிண்டர் இணைப்பு வழங்கியவர் பிரதமர் மோடி.

கனிமொழி குடும்பத்தின் பிரச்னைக்காக டெல்லியில் அரசியல்வாதியாக உள்ளார். அவருக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி கொண்டு, தமிழகத்தின் பிரச்சனைகளைப் பேசுவதற்கும், அவர்களுடைய கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைத்துக் கொண்டு வருகிறார். அவர் மாநில அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். சமூக நீதி, பெண்ணுரிமை என்று பேசக்கூடிய திமுகவில் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு முதல்வர் வாய்ப்பு இல்லை. உதயநிதிக்கு தான் துணை முதல்வர் பதவியைக் கொடுத்துள்ளனர். அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்களே இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப்படுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். போர் காரணமாக பலவேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம். போர் எப்போது நிற்கும் என யாரும் சொல்ல முடியாது. தொழில் துறையினரின் பிரச்சனைகளை மத்திய அரசுக்கு கொண்டு சென்றுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கீடு சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். மக்களின் பிரச்சனைகளை மனதில் வைத்து NDA கூட்டணியினர் களம் கண்டு வருகின்றனர்.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கடிதம் அனுப்பியது பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. பாஜகவிற்கு கிடைத்த இடங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டும். வடக்கு தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன் என்று கட்சி அறிவிக்கவில்லை. கோவை தெற்குத் தொகுதி மக்கள், அரசியல் வாழ்க்கை கொடுத்தார்கள்.

கடந்த 10 வருடங்களாக தெற்கு தொகுதியில் பணிபுரிந்தேன். பாஜக வேட்பாளர் இன்னும் அறிவிப்பு வரவில்லை. கூட்டணியில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருசில இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். விட்டு கொடுப்பவர்களுக்கு MP பதவி, கட்சி பதவி போன்றவை கொடுப்பார்கள். கட்சி எனக்கு எந்த பணிகள் கொடுத்தலும் 100 சதவீதம் வேலை செய்வேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+