ஐசியூவில் வானதி சீனிவாசன்! கழுத்தில் பாஜக துண்டுடன் வாக்கு சேகரிப்பது யார்னு பாருங்களேன்!
கோவை: கோவை வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் ஆதர்ஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவும் மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் வரும் சட்டசபைத் தேர்தலில் வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர் தொகுதி மாறுவது குறித்து நிறைய பேச்சுக்கள் அடிபட்டன. அந்த வகையில் அவர் தொகுதி மாறி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை ஆதரித்து அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
இந்த நிலையில் வானதிக்கு திடீரென வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்றால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
இதனால் அவரது தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானதி சீனிவாசன் நேற்று மதியம் 2:50 மணிக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றிற்கு லேசான அலர்ஜி எதிர்வினை ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு கண்காணிப்புக்காக ஐசியு (ICU) பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உணர்வுடன் இருந்து, பேசக்கூடிய நிலையில் மிகவும் நலமாக உள்ளார்.
முழுமையாக குணமடைய குறைந்தது மேலும் 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை தேவைப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை வடக்கு தொகுதியில் கழுத்தில் பாஜக துண்டு அணிந்து கொண்டு அவரது மகன் ஆதர்ஷ் வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த தொகுதியில் வாக்கு சேகரிக்கும் அவரை பாஜக மூத்த தலைவர்கள் மக்களிடம் வானதியின் மகன் என அறிமுகப்படுத்தினர். இதை வைத்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications