குஷ்பு தமிழ் பேசுறதே பெருசு.. அர்த்தம் புரியாமல் சொல்லி இருப்பார்.. வக்காலத்து வாங்கிய வானதி!
கோவை: குஷ்பு தமிழ் பேசுவதே பெரிது, அர்த்தம் புரியாமல் பேசி இருப்பார் என குஷ்பு மகளிர் உரிமைத்தொகையை பிச்சை எனக் கூறியது பற்றி பதில் அளித்துள்ளார், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
சென்னை செங்குன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷயம் சர்ச்சைக்கு உள்ளானது. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார் குஷ்பு.

பெண்கள் உட்பட அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் தமிழ்நாஅடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பிச்சை என விமர்சித்து பேசிய குஷ்புவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுகவினர் நடிகை குஷ்புவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் குஷ்பு பேச்சைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
எனினும் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார் குஷ்பு. தனது பேச்சை வைத்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறியும், திமுகவை விமர்சித்தும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் குஷ்பு.
இந்நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், மகளிர் உரிமைத் தொகையை பாஜக நிர்வாகி குஷ்பூ பிச்சை என்று விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
வானதி சீனிவாசன் கூறுகையில், "குஷ்பு இவ்வளவு தூரம் தமிழ் பேசுவதே பெரிய விஷயம். குஷ்புவின் தாய்மொழி வேறு. வேறு மொழி பேசக் கூடியவர் என்பதால், வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் பேசியிருப்பார். அதனால், அவரது வார்த்தையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications