அடுத்தடுத்து களமிறங்கும் விஐபிகள்.. இறங்கியடிக்கும் கணவர்.. கோவை வடக்கில் வானதி பலே வியூகம்
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வானதி சீனிவாசன் தற்போது இறுதிகட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். ஒருபக்கம் வானதியின் கணவர், மகன்கள் பிரச்சாரம் செய்ய, மறுபக்கம் மத்திய அமைச்சர்கள், பிரபல தலைவர்கள் அடுத்தடுத்து பிரச்சாரம் செய்கிறார்கள். அங்குள்ள மலையாள மக்களிடம் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மூலம் பிரச்சாரம் செய்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மீண்டும் பிரச்சார களத்திற்கு திரும்பியுள்ளார். வானதிக்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பிரபல நிர்வாகிகள் என்று பெரும் படையே வடக்கில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

வானதிக்கு ஆதரவாக சுரேஷ் கோபி
வானதிக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி அங்குள்ள மலையாளி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அப்போது சுரேஷ் கோபி பேசுகையில், "வானதி சீனிவாசன் என் சகோதரி. அவரை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது அவசியம். வானதி சீனிவாசன் கடந்த 5 வருடங்களில், கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக அவர் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதே போல வடக்கு சட்டமன்ற தொகுதியிலும் அவரை தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் . வானதி சீனிவாசனை போன்ற பல சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்" என்று தமிழ், மலையாளத்தில் பிரச்சாரம் செய்தார்.
திட்டங்கள்
தொடர்ந்து பேசிய சுரேஷ் கோபி, "திமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க கூடாது. மக்கள் நலன் பற்றி யோசிக்கும் வானதி சீனிவாசனுக்கு வாக்களித்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பெண்கள் தங்களின் சொந்தக்காலில் நின்று முன்னேறுவதற்காக வானதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார்.
போதைப் பொருட்கள் புழக்கத்துக்கு தடையை ஏற்படுத்திக் கொடுப்பார். பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப் புள்ளிவைக்கப்படும். ஒவ்வொருவரும் அவருக்கு வாக்களிப்பதை உறுதி செய்யுங்கள். திமுகவை பற்றி தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அது ஊழல் செய்வதில் சிறந்த கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள்.
களத்தில் கணவர்
சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். கட்சிக்காரக்காரர்களே போதை பொருட்களை புழக்கத்தில் விடுகிறார்கள். மாணவர்க்ள, இளைஞர்கள் போதை பொருட்களை கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட கட்சிகளுக்கெல்லாம் நாம் ஆதரவு கொடுத்து திரும்பவும் ஆட்சியில் அமர்த்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும்" என்றார்.
மறுபக்கம் வானதிக்கு ஆதரவாக அவரின் கணவர் சீனிவாசன், மகன்களும் பிரச்சாரம் செய்கிறார்கள். கணவர் சீனிவாசன் அந்த தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அமைப்புகள், சாதிய சங்கங்கள் என அனைத்து தரப்பினரிடமும் நுணுக்கமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications