கோவை காந்திபுரம் 8-ம் நம்பர் அரசு மருத்துவமனையில் ஆண்கள் கூட்டம்.. ரூ.3,100 தரும் அரசு
கோவை: ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் கோவை காந்திபுரம் 8-ம் நெம்பர் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமையான இன்று நடக்கிறது. இந்த சிகிச்சை முறையாக பயற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்பட உள்ளது. இதில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ஊக்கதொகையாக ரூ.3,100 வழங்கப்படுகிறது.
வாசெக்டமி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ள அரசு அடிக்கடி சிறப்பு முகாம் அமைக்கிறது. பொதுவாகவே வாசெக்டமி சிகிச்சை மிகவும் எளிமையானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வாசெக்டமி சிகிச்சை என்றால் என்ன: வாசெக்டமி சிகிச்சை என்பது விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சையாகும். இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் இல்லற வாழ்க்கை, கடின உழைப்பு ஆகியவை பாதிக்கப்படாது.. ஆனால் இதுபற்றி கட்டுக்கதைகளும் வதந்திகளும் அதிகமாக பரவி உள்ளதால் ஆண்கள் தயங்குகிறார்கள்.
அதேநேரம் வாசெக்டமி அறுவை சிகிச்சை என்பது பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சையைவிட எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் கிடையாது. பக்க விளைவுகள் எதுவும் இல்லா இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு தகுதியுடைய ஆண்கள் பயன் பெற முடியும் என்பதால், தமிழக அரசு முகாம் அமைத்து இலவசமாகவே இந்த சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறது.
கோவை மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் கவுரி கூறுகையில், "ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் கோவை காந்திபுரம் 8-ம் நெம்பர் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமையான இன்று நடக்கிறது. இந்த சிகிச்சை முறையாக பயற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்பட உள்ளது
கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி செய்யப்படுகிறது. இதில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ஊக்கதொகையாக ரூ.3,100 வழங்கப்படும். குடும்பநல அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்புக்கோ தடை ஏதுமில்லை. இதற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பக்கவிளைவுகள் இல்லாத அறுவை சிகிச்சை ஆகும்" இவ்வாறு கூறினார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications