Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Velliangiri: கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மரணம் - ஐந்தாவது மலையில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தின் சிறப்பம்சமே மலைகள் தான். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால் அங்கு ஏராளமான மலைப் பகுதிகள் உள்ளன. அதில் சுற்றுலா தலங்கள், கோயில்கள் உள்ளன. வெள்ளியங்கிரி மலை கோயில் தமிழ்நாடு முழுக்க பிரபலமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பூண்டி அருகே தென்கைலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. பூண்டி அடிவாரத்தில் இருந்து, மலை மீது அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க 5.5 கி.மீ தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக மலையேற்றம் செய்ய வேண்டும். ரம்மியமான அந்த இடத்திற்கு செல்வது அனைவருக்கும் எளிதாக இருக்காது.

velliangiri-one-pilgrim-died-in-coimbatore-velliangiri-hill

வெள்ளியங்கிரி மலை

வெள்ளியங்கிரி மலைப் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுவாக வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை மட்டுமே பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். இடம் மற்றும் பயண அனுபவம் சிறப்பாக இருக்கும் என்பதால் கோவை மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வெள்ளியங்கிரி மலையேறி வருகிறார்கள்.

இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக மகா சிவராத்திரி முதல் சித்ரா பவுர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேறுவது வழக்கம். அதன்படி இந்த 2026 வருடத்தை பொறுத்தவரை, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

பக்தருக்கு சோகம்

இதையடுத்து கடந்த 21 நாட்களாக, தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியங்கிரிக்கு மலையேற்றம் செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக வெள்ளியங்கிரி மலையேற்றத்தின்போது சிலர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, இந்த வருடம் மலையேற்றத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளியங்கிரி மலையேறுபவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, எடாங்கிமங்களம் பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜன் (வயது 60) என்பவர் நேற்று இரவு வெள்ளியங்கிரி மலையேறியுள்ளார்.

காவல்துறை விசாரணை

அவர் இரவு 8 மணியளவில் ஐந்தாவது மலைக்கு சென்றபோது, ஒட்டன் சித்தர் சமாதி அருகே திடீரென மயக்கமடைந்துள்ளார். இது குறித்த வனத்துறை மற்றும் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தகவல் கிடைத்தவுடன், போளுவாம்பட்டி வனப்பணியாளர்கள், டோலி தூக்கும் சுமை பணியாளர்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு மயக்க நிலையில் இருந்த தேசிங்கு ராஜனை டோலி மூலம் ஐந்தாவது மலையிலிருந்து பூண்டி மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அடிவாரத்தில் ஏற்கனவே காத்திருந்த மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது, தேசிங்கு ராஜன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரின் உடல் ஆலந்துறை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தேசிங்கு ராஜா உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளியங்கிரி மலைக்கு ஆன்மீக பயணத்திற்காக வந்த பக்தர் மலையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+