கோவையில் ஜொமாட்டோ டெலிவரி பாயை எகிறி வந்து எட்டி உதைத்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர்.. என்ன நடந்தது?
கோவை: கோவையில் ஜொமாட்டோ உணவு டெலிவரி ஊழியரை ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஒருவர் தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஸ்டீபன் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அத்துடன் படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையும் செய்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 1ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்துள்ளார்.
இதனை வாங்குவதற்காக, ஸ்டீபன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற போது, கடை உரிமையாளர் அவரை தரக்குறைவாக பேசி, அடித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், அந்த வீடியோ பரவிய சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக ஜெமாட்டோ உணவு டெலிவரி ஊழியர் ஸ்டீபன் கூறுகையில், உள்ளே சென்ற உடன், என்னிடம் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஆர்டர் ஐடி கேட்டார். ஆனால் அங்கிருந்த டிராபிக் காரணமாக எனக்கு காது கேட்கவில்லை. இரண்டு மூன்று முறை என்னை கூப்பிட்டார்.நான் திரும்பவில்லை. உடனே என்னை டே என்று மரியாதை இல்லாமல் கூப்பிட்டு,உனக்கு காது செவுடா, ஹெல்மெட்டை கழட்டிவிட்டு வாடா என்று மரியாதை இல்லாமல் கேட்டார்.
அப்போது அவரிடம் சென்ற போது என்னை அடித்தார். அத்துடன் எங்களை மரியாதை இல்லாமல் பேசினார். அடித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை அப்படியே முடிந்து விடும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications