4 மணிவரை கோவை லீமெரிடியனில் தங்கும் விஜய்! ரெஸ்ட் கேப்பில் ரகசிய மீட்டிங்! இவங்களையா பார்க்கிறார்?
கோவை: தவெகவில் இணையும் கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை விஜய், ரகசியமாக சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 80 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் தனது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளார்.

நடுவே கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து சிறிது நாட்கள் பிரச்சாரம் செய்யாமல் இருந்த விஜய், அண்மையில் புதுவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜய் பங்கேற்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது ஈரோட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்காக விஜய் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் ஈரோட்டிற்கு செல்கிறார்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எத்தனையோ பொதுக் கூட்டங்களை செங்கோட்டையன் நடத்தியிருந்தாலும் தவெகவில் இணைந்ததும் நடத்தப்படும் முதல் கூட்டம் இது என்பதால் இதன் ஏற்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஜய் பேசுவதற்காக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுக் கூட்டத்திற்காக போலீஸார் 43 நிபந்தனைகளை விதித்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தை முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு விஜய் திரும்புகிறார் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட கேப்பில் அவர் கோவை லீமெரிடியன் ஹோட்டலில் தங்கியிருப்பார் என்கிறார்கள். அப்போது அவர் தனது கட்சியில் சேரக் கூடிய முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை ரகசியமாக சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணையும் போது அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை அங்கிருந்து அழைத்து வந்து தவெகவில் இணைய வைப்பேன் என்ற சபதத்துடன் வந்திருப்பதாக தெரிகிறது.
அவரும் பல்வேறு பேட்டிகளில் ஆம்! அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தவெகவில் விரைவில் இணைவார்கள் என்றும் தெரிவித்து வந்தார். இன்றைய தினம் ஈரோடு பொதுக் கூட்டத்தில், தனது சொந்த இடத்தில் வைத்தே முக்கிய நிர்வாகிகளை தவெகவில் இணையவைத்து விஜய்க்கு செங்கோட்டையன் சர்பிரைஸ் கொடுப்பார் என சொல்லப்பட்டது. கோவை ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சட்டசபை தேர்தலுக்கு சில காலமே உள்ளதால் யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கும் செல்வார்கள் என தெரிகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி தரும் வகையில் இன்று கோவையில் யாரெல்லாம் விஜய்யை பார்க்க போகிறார்கள் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications