கோவையில் விஜய் ரசிகர்கள் அட்ராசிட்டி! கையோடு வந்த கேரவனின் கதவு! மாற்று வாகனத்தில் மாநாட்டு பயணம்
கோவை: தவெக பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு கோவை வந்த விஜய் அங்கு பிரச்சார வாகனத்தை ரசிகர்கள் சேதப்படுத்திவிட்டதால் அவர் மாற்று வாகனமான காரில் பயணித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு இன்று கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

இன்று காலை தனது வீட்டிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். அவர் பிரசார வாகனத்தில் சென்ற போது ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது ஒரு சிலர் பிரச்தார வாகனத்தின் மேல் ஏற பார்த்தனர்.
அவர்களை பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர்.
கோவை வந்த விஜய், அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். சுமார் 4 மணி நேர ஓய்வுக்குப் பிறகு, மாலை 3 மணியளவில் கருப்பு நிற ஃபார்ச்சூனர் காரில் விடுதியிலிருந்து புறப்பட்டார்.
விடுதிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு விஜய் 13 கி.மீ. தூரம் காரில் வந்தார்.
அப்போது அவரை தொண்டர்களும் ரசிகர்களும் பின்தொடர்ந்து வந்தனர். வழியில் ஆங்காங்கே செல்பி எடுக்க ரசிகர்கள் காரை வழிமறித்தனர். இந்த மாநாட்டில் சுமார் 70 பூத் கமிட்டி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த கருத்தரங்கம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
முன்னதாக விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார். மாலை 4 மணியளவில் மாநாட்டு வளாகத்தை அடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. மாநாடு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதால், அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, விஜய் பயணித்த கேரவன் வாகனத்தின் கதவுகளை ரசிகர்கள் சேதப்படுத்தியதால், அவர் மாநாட்டு இடத்திற்கு மாற்று வாகனத்தில் பயணித்தார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!











Click it and Unblock the Notifications