கோவை மதரஸாவில் உட்கார்ந்திருப்பது யார்? வாக்காளர் பட்டியல் பணியில் பிஎல்ஓக்கள்? சினம் கொண்ட எச்.ராஜா
கோவை: "அனைத்து கோவில்களின் மொத்த நிலம், ஒவ்வொரு கோவில் வாயிலாக பராமரிக்கப்படும் நிலம், தனியாருக்கு குத்தகைக்கு அளித்த நிலம், ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் ஆகியவை எவ்வளவு? என, 6 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.. ஆனால், இதுவரை திமுக அரசு பதிலளிக்கவில்லை.. எனவே, வரும் 2026 தேர்தலில் இந்த தீய சக்திகளை அடித்து விரட்டினால் ஒழிய, இந்து கோவில்களை காப்பாற்ற முடியாது" என்று மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து கூறியிருக்கிறார்.
பொள்ளாச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "பீகாரில் கடந்த தேர்தலை விட 9 சதவீதம் அதிகமாக, 65.08 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.. இதற்கு காரணம், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியாகும்.. தேர்தல் கமிஷன் உத்தரவை எந்த கட்சியும், ஆட்சியும் மீற முடியாது.

மதரஸா - பிஎல்ஓக்கள்
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு, பயிற்சி பெற்ற பிஎல்ஓக்கள் நியமிக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாவட்டம் ஆத்துப்பாலம், கிணத்துக்கடவு சட்டமன்றத்துக்குட்பட்ட பகுதியில் மதரஸாவில் உட்கார்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை பிஎல்ஓக்கள் மேற்கொள்கிறார்கள்.. இதை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இதற்கு காரணமான பிஎல்ஓக்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
தூய்மையான பீகார்
மத அமைப்பில் உட்கார்ந்து இப்படி செய்ய வேண்டுமா? எனவே பாரபட்சமாக இந்த பணி நடக்காதோ? என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இப்படி செய்வது மிகப்பெரிய குற்றமாகும்..
அதுமட்டுமல்ல, திமுகவினுடைய நிர்வாகிகள் கையில் மொத்தமாக கொடுக்கிற பிஎல்ஓக்களாக இருப்பதாகவும் ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைக்கின்றன..
பீகார் போன்ற இடத்தில் தூய்மைப்படுத்தப்பட்டிருக்கு.. ஆனால், இந்த தமிழ்நாட்டில் தில்லுமுல்லு பண்ணுவதற்கு முயற்சி செய்வதுபோல உள்ளது.. எனவே இதற்கு எதிராக நாம் குரல் கொடுப்பதுடன், ஒவ்வொரு பூத்திலும் பிஎல்ஓ உடன் செல்ல வேண்டும்..
வாக்காளர் பட்டியல் தொடர்பாக பேசி வரும் ராகுலுக்கு முழு மருத்துவ பரிசோதனை அவசியம். அவர் உளறியதைக் கேட்டு ஸ்டாலினும் உளறுகிறார்..
கோயில் நிலங்கள்
கடந்த 2021ல், ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் சொத்துக்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. அனைத்து கோவில்களின் மொத்த நிலம், ஒவ்வொரு கோவில் வாயிலாக பராமரிக்கப்படும் நிலம், தனியாருக்கு குத்தகைக்கு அளித்த நிலம், ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் ஆகியவை எவ்வளவு? என, 6 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது..
ஆனால், இந்து விரோத ஸ்டாலின் அரசு இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும்கூட, அறிக்கை தாக்கல் செய்யவில்லை..
குரல்வளை திருகுவேன்
இதை சொன்னதற்காக, அறநிலையத்துறையில் பார்க்கும் அதிகாரிகளால், 40 இடங்களில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. "கோர்த்துவிட்டு பேசுவியா நீ? உன் குரல்வளையை திருகுவேன்" என்பதே இந்த அரசாங்கத்தின் வேலையாக உள்ளது.
எனவே, வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் இந்த தீய சக்திகளை அடித்து விரட்டினால் ஒழிய, இந்து கோவில்களை காப்பாற்ற முடியாது என்றெல்லாம் எச்.ராஜா காட்டமாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications