கோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை!

கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Weather Report: Heavy rain pouring in many parts of TN

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இன்று கோவையில் மாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. மாலை 5 மணிக்கு துவங்கி மழை இப்போதும் பெய்து வருகிறது.திருப்பூர், சேலம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.

அதே சமயம் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.மேலும் டெல்டா பகுதிகளில் கடந்த 1.30 மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்கிறது.

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் விரைவாகவே பருவமழை தொடங்கிவிட்டது. இன்னும் இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்த மழை பெய்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை நாளை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+