சிறைவாசிகள் விடுதலை என்னாச்சு.. முதல்வர் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இருக்காங்களா? -நெல்லை முபாரக்
கோவை: குனியமுத்தூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட பொருளாளர் இக்பாலின் இல்ல திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இரு தினங்களுக்கு முன் சென்னை புறநகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தை மக்களின் விருப்பத்திற்க்கு மாறாக செயல்படுத்த கூடாது என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவில் 12 கிராம மக்கள் எவ்வளவு பணம் தந்தாலும் இடங்களை விட்டுத்தர மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம்
கடந்த ஆட்சியை போல மக்களை நிர்பந்தபடுத்தி, மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் திட்டங்களையும், விவசாயிகள் மீது தினிக்க வேண்டாம். இது சம்பந்தமாக, அந்த மக்களை சந்தித்த சேலம் சென்னை எட்டு வழி சாலை போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், டாக்டர் குணசேகரன், தர்மராஜா ஆகியோரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து வைத்துள்ளனர்.

சிறைவாசிகள் விடுதலை
மக்களின் குரலை, அரசின் செவிகளுக்கு எடுத்து கூறும், மக்களமைப்புகளை முடக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு வாக்குறுதி அளித்தபடி ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையின மக்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இன்னும் நிலுவையில் உள்ளது.

கார்பரேட்டுகளான மத்திய அரசு
தமிழ்நாடு மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கவனத்தில் கொண்டு அரசு வீரியமாக செயல்பட வேண்டும். மத்திய அரசு மக்களுக்கான அரசா அல்லது அதானிக்கான அரசா என தெரியவில்லை. மத்திய அரசு மக்களுக்கு விரோதமாக கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படுகிறது. மத்திய அரசிடம் கூறுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உள்ளது. அது ஜிஎஸ்டி அரசாக இருக்கிறது.

யார் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள்?
முதல்வர் பிரதமரை சந்தித்தபொழுது சேலம் - சென்னை எட்டு வழி சாலை வரக்கூடாது என தெரிவித்தார். இதனை பார்க்கும் பொழுது மக்கள் நலனில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால், அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களது கட்டுப்பாடுகளை இழந்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது." என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications