சிவராத்திரியில் எடப்பாடி தூக்கத்தை கலைத்த சம்பவம்.. அமித் ஷாவை சந்தித்த மாஜி.. நொறுங்கிடுச்சே
கோவை: கோவையில் ஈசா மையத்தில் நடந்த சிவராத்தி விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக கோவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று டெல்லிக்கு திரும்புகிறார். விழாவில் கலந்து கொண்ட அமித்ஷாவை 5 நிமிடம் சந்திக்கும் வாய்ப்பு அதிமுகவை சேர்ந்த மணியான மாஜி அமைச்சருக்கு கிடைத்திருக்கிறது.
அப்போது நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட ஒரு ஃபைலை அமித் ஷாவிடம் மணியான மாஜி அமைச்சர் கொடுத்ததாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது, எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் உள்ள அதிருப்தி தலைவர்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி கடிதம் கொடுத்தார் என்று ஒரு தகவல் பரவுகிறது.

இல்லை இல்லை எடப்பாடி தயாரித்து வைத்திருந்த திமுக அமைச்சர்கள் சிலரின் சொத்துக்கள் அடங்கிய விபரங்கள் கொண்ட தகவல்கள் அந்த ஃபைலில் இருந்தது, அதனை எடப்பாடிதான் அமித் ஷாவிடம் கொடுக்கச் சொல்லி மணியான மாஜி அமைச்சரிடம் எடப்பாடி கொடுத்தனுப்பினார் என்றும் இரு வேறு தகவல்கள் அதிமுகவில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, அமித் ஷாவை சந்திக்கலாம் வாங்க என்று செங்கோட்டையனை அந்த மாஜி அழைத்ததாகவும், இப்போதைக்கு வேண்டாம்; மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என்று செங்கோட்டையன் மறுத்ததாகவும் அதிமுக சீனியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது
எடப்பாடி அதிர்ச்சி
சமீபத்தில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.
உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.
உண்மையில் என்ன நடந்தது?:
உண்மையான காரணம் அது கிடையாது என்கின்றனர் அதிமுகவினர். நம்மிடம் பேசிய சீனியர் ஒருவர், "2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் செங்கோட்டையன். கடந்த 1 வருடமாக சசிகலாவிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். சசிகலாவின் எண்ணத்தை பிரதிப்பலிப்பதைப் போலவே செங்கோட்டையனின் சமீபகால நடவடிக்கைகள் இருக்கின்றன.
செங்கோட்டையன் கொங்கு மண்டலம். அதே எடப்பாடியின் அதே ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர். செங்கோட்டையனுக்கு எடப்பாடியை விட அவர் ஜாதி பின்புலத்தில் அதிக பவர் உள்ளது. செங்கோட்டையன் சீனியர் என்பதால்.. அவருக்கு உட்கட்சி சப்போர்ட் அதிகம் இருக்கும். அதன்படி செங்கோட்டையனை ஓ பன்னீர்செல்வத்தை போல எளிதாக எதிர்கொள்ள முடியாது. இது ரொம்ப சவாலான விஷயம். கவனமாகவே எதிர்கொள்ள வேண்டும். இது போக செங்கோட்டையன் ஜெயலலிதா காலத்திலேயே அரசியல் செய்தவர். அவருக்கு கட்சி அரசியல், நிர்வாக பிரச்சனை, ஜாதி பார்முலாக்களை எதிர்கொள்ள தெரியும். இதனால் செங்கோட்டையன் அதிமுகவில் திடீரென கலகம் செய்ய தொடங்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications