சென்னையைச் சேர்ந்த அண்ணன் தங்கை.. உடல் பருமனால் அவதி.. கோவை ஓட்டல் அறையில் பரிதாப முடிவு
கோவை: சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இப்ராகிம் பாட்சா என்பவரும், அவரது தங்கையான சம்சத் பேகம் ஆகிய இருவரும் அதிக உடல் பருமனால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை காந்திபுரத்துக்கு காரில் வந்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். உடல் பருமனுக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற வந்து இருப்பதாக கூறி அறை எடுத்து தங்கிய அண்ணன், தங்கைஇருவரும், ஓட்டல் அறையில் எடுத்த முடிவு பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 54 வயதாகும் இப்ராகிம் பாட்சா டிரைவராக இருக்கிறார்.இவருடைய தங்கை சம்சத் பேகத்திற்கு 50 வயது ஆகிறது. அண்ணன் தங்கை இருவரும் அதிக உடல் பருமனால் அவதிப்பட்டு வந்துள்ளார்கள். இதற்காக அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார்கள். கோவை காந்திபுரத்துக்கு காரில் வந்த அவர்கள், அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

அப்போது இப்ராகிம் பாட்சா ஓட்டல் மேலாளரிடம் கோவைக்கு உடல் பருமனுக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற வந்து இருப்பதாக கூறியிருக்கிறார். அண்ணன் தங்கை இருவரும் ஓட்டலில் இருந்த அறையில் தங்கினர். ஆனால் அவர்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இப்ராகிம் பாட்சா திடீரென்று ஓட்டல் அறையில் இருந்து வரவேற்பு அறைக்கு வந்துள்ளாராம். பின்னர் இப்ராகிம் பாட்சா, அங்கிருந்தவர்களிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து விட்டு வருவதாக கூறி வெளியே போயிருக்கிறார். வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு சென்றனர். அந்த அறை பூட்டப்பட்டு இருந்தது.
உடனே ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சம்சத் பேகம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்திருக்கிறார். அதை பார்த்து அதிர்ந்துபோன ஊழியர்கள் உடனே காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் காட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
இதில் சம்சத் பேகம் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரையை தின்று உயிரைவிட்டது தெரியவந்தது. மேலும் அவரது உடல் அருகில் ஒரு கடிதம் கிடந்தது. அதில் நானும், அண்ணனும் உடல்பருமனால் அவதிப்பட்டு வந்தோம்.ஆனால் எங்களுக்கு இப்படி வாழ பிடிக்கவில்லை.. எனவே எங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம்.. இருவரின் உடல்களையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள் என எழுதப்பட்டு இருந்ததாம்.
இதையடுத்து சம்சத் பேகத்தின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கை சம்சத்பேகம் உயிரைவிட்ட நிலையில், அவரது அண்ணன் இப்ராகிம் பாட்சா அறையில் இருந்து வெளியேறியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே போலீசார், இப்ராகிம் பாட்சா வந்த காரின் பதிவு எண் மற்றும் அதில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ். கருவி மூலமும் தேடினார்கள். இதில் அந்த கார் கோவை ரயில் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது காருக்குள் இப்ராகிம் பாட்சா இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர், தற்கொலை செய்து கொள்வதற்காக தங்கையுடன் சேர்ந்து தூக்க மாத்திரைகளை தின்றதாகவும், தங்கையை விட குறைந்த எண்ணிக்கையில் தூக்க மாத்திரையை தின்றதால் இறக்கவில்லை என்றும், இதனால் பிளேடை உடைத்து விழுங்கியதாகவும், மேலும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக கோவை ரயில் நிலைய பகுதிக்கு வந்ததாகவும் கூறினாராம். உடனே போலீசார் இப்ராகிம் பாட்சாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் பருமனை குறைக்க இப்ராகிம் பாட்சா, அவரது தங்கை சம்சத் பேகம் ஆகியோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள் ஆனால் உடல் எடை குறையாததால் அவர்கள் 2 பேரும் கோவைக்கு வந்து உயிரைவிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications