தகரப்பெட்டியை விடுங்க! அண்ணாமலை - அதிமுக மோதலுக்கு இடையே! கோவையில் சத்தமின்றி காய் நகர்த்தும் திமுக
கோவை: கோயம்புத்தூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை - அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இந்த வார்த்தை போருக்கு இடையே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சத்தமின்றி அங்கே களப்பணிகளை செய்து வருகிறார்.
நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாங்க 2002-ல் கோவைக்கு வந்தப்ப.. அவங்க அப்பா (அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா) ஒரு எம்.எல்.ஏ. அவங்க அப்பாவின் எம்.எல்.ஏ. கோட்டா சீட்டை பயன்படுத்தி கல்லூரியில் படித்தவர் சிங்கை ராமச்சந்திரன். இதுதான் வாரிசு அரசியல். ஆனால் 2002-ல் முதன் முதலாக நான் கோவைக்கு எதுவும் இல்லாமல் வந்தேன்.

எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002-ல் கோவைக்கு வந்தேன். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு. அன்னைக்கு எனக்கு வயது 17. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பேருந்தை பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீளமேடு போய் இறங்குறேன். பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி முன்னாடி நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்து கொண்டு நின்றோம்.
பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை.. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை. தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன்., என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
பதிலடி; இந்நிலையில் தான் அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், கரூரை சேர்ந்த, இந்த ஊரை சேராத ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை, மறைந்த எனது தந்தை சிங்கை கோவிந்தராசு எம்எல்ஏ கோட்டாவில் சீட் வாங்கியதாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த கருத்து மிகவும் தவறான, மனவருத்தத்துக்குரிய ஒரு செயல். தந்தை இறக்கும்போது எனக்கு வயது 11. நான் பிஇ படிக்கும்போது எனக்கு வயது 18. நான் டிப்ளேமா படித்தபோது ‛பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ஸ்' எனும் விருதை பிஎஸ்ஜி பாலிடெக்னிக்கில் வாங்கி பிஎஸ்ஜி டெக்கில் வாய்ப்பு கிடைத்தது.
அவர் (அண்ணாமலை) தகர டப்பாவை எடுத்து கொண்டு 3 பஸ் மாறி வந்தாக கூறுகிறார். நான் இந்த பக்கம் தகர டப்பாவை பிடித்தேன். அந்த பக்கம் அவரது அப்பா தகர டப்பாவை பிடித்ததாக கூறுகிறார். அவருக்காவது தகர டப்பாவை பிடிக்க அப்பா இருந்தாங்க. ஆனால் எனக்கு அப்பாவே இல்லை. நான் தனி ஆளாக 1995ல் வரதராஜபுரத்தில் இருந்து பஸ் ஏறி நான் தனியாக தான் சென்றேன், என்று பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக என்ன செய்கிறது?: இப்படி கோயம்புத்தூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை - அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இந்த வார்த்தை போருக்கு இடையே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சத்தமின்றி அங்கே களப்பணிகளை செய்து வருகிறார்.
இவர் மீடியாக்களில் அதிகம் தோன்றாமல் தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார். உதாரணமாக நேற்று மாலை கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு டவுன்ஹால் கோட்டைமேடு பகுதியில் உள்ள: 1.கோட்டை ஹிதாய்யத்துல் இஸ்லாம் சாஃபியா ஜமாத்
2. தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாத்
3. கோட்டை கேரளா ஜமாத்
4. கோட்டை வின்சென்ட் ரோடு முஸ்லிமின் பள்ளிவாசல் பகுதிகளுக்கு சென்று பேசினார்.
அதன்பின் காலை கோவையைச் சார்ந்த பிரபல தொழில் அதிபர் ஓ. ஆறுமுகசாமியை சந்தித்து ஆதரவு கோரினார். இது போக செயல் வீரர்கள் கூட்டமும் நடந்தது.
பொதுவாக தேர்தலில் ஜெயிக்க மீடியா பலத்தை விட.. நேரடியாக களத்தில் பணிகளை செய்வது முக்கியம். அப்படித்தான் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அங்கே உள்ள அமைப்புகள், பிரிவுகள், தொழிற்சங்கங்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். பெரிதாக செய்திகளில் தோன்றாமல் நேரடியாக களப்பணிகளை செய்து வருகிறார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications